அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்கறிஞர் வழக்கு

உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்கறிஞர் வழக்கு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம்வரை அமைச்​சர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக தவெக பெண் வழக்​கறிஞர் ஒரு​வர் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இது தொடர்​பாக விழுப்​புரத்தை சேர்ந்த தவெக வழக்​கறிஞரணி நிர்​வாகி​யான எம்​.​ஞானசவுந்​தரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​: தமிழகம் முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களை நியமிப்​பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5-ம் தேதி அறி​விப்​பாணை வெளி​யிட்​டது.

அதன்​படி, பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த நானும் தவெக வழக்​கறிஞர் என்ற முறை​யில் விண்​ணப்​பித்​தேன். இப்​ப​தவிக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான காலக்​கெடு ஜூன் 29 மாலை வரை என அறிவிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அன்று பிற்​பகலிலேயே அரசு வழக்​கறிஞர்​கள் நியமனம் தொடர்​பான பட்​டியல் சமூக வலை​தளங்​களில் பரவியது. அந்​தப் பட்​டியலில் எனது பெயர் இல்லை என்​ப​தையறிந்து அது தொடர்​பாக தவெக மாவட்​டச் செய​லா​ளரிடம் முறை​யிட்​டேன்.

இதுகுறித்து விசா​ரித்​த​போது, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம் வரை தவெக அமைச்​சர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் லஞ்​சம் பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது.

முதல்​வர் விஜய் லஞ்​சத்​துக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில் என்​னைப்​போல கட்​சிக்​காக உழைத்த பல வழக்​கறிஞர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

எனவே, தமிழகம் முழு​வதும் அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​தில் நடைபெறும் முறை​கேடு தொடர்பாக விசா​ரித்து சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். தகு​தி​யானவர்களை இப்​ப​தவி​களுக்கு நியமிக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்.

என்னை விழுப்​புரம் மாவட்​டத்​தில் அரசு வழக்​கறிஞ​ராக நியமிக்​க​வும், அது​வரை அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​துக்​கும், அது தொடர்​பான அறி​விப்​பாணைக்​கும் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யுள்​ளார். இந்த வழக்கு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்கறிஞர் வழக்கு
மேகேதாட்டு அணையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் போராடும்: மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in