திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
Updated on: 
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுபதி வெற்றி பெற்​றார்.

இத்​தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டியிட்ட முன்​னாள் அமைச்​சர் கே.ஆர்​.பெரிய கருப்​பன் 83,374 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில், தவெக​வின் சீனி​வாச சேதுபதி 83,375 வாக்​கு​கள் பெற்​று, ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் பெரியகருப்​பனைத் தோற்​கடித்​தார்.

இதைத் தொடர்ந்​து, சீனி​வாச சேதுப​தி​யின் தேர்​தல் வெற்றி செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பெரிய கருப்​பன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், ‘சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு உரிய தபால் வாக்​கை, வேலூர் அடுத்த திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்​பிய​தால்​தான் நான் தோல்வி அடைந்​தேன். எனவே, அந்த தபால் வாக்கை சரி​பார்க்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தார்.

தனக்கு எதி​ரான இந்த தேர்​தல் வழக்கை நிராகரிக்​கக் கோரி திருப்​பத்​தூர் எம்​எல்ஏ சீனி​வாச சேதுபதி மனு தாக்​கல் செய்​தார். அதில், ‘அனைத்து சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் பிரத்​யேக எண் வழங்​கப்​பட்​டு, அதன் ​மூல​மாகவே அத்​தொகுதி அடை​யாளம் காணப்​படு​கிறது.

தபால் வாக்​கு​களும் தொகுதி எண், மாவட்​டங்​களின் அடிப்​படை​யில்​தான் பிரி்க்​கப்​படு​கிறதே தவிர, ஊர் பெயரை வைத்து பிரிப்​ப​தில்​லை. எனவே, இந்த வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல.

இதை நிராகரிக்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தார். இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, சீனி​வாச சேதுப​தி​யின் மனுவை ஏற்​று, பெரிய கருப்​பன் தொடர்ந்த தேர்​தல் வழக்கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்: கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in