துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ.10,000 கூப்பன் வழங்குவதாக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ.10,000 கூப்பன் வழங்குவதாக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
Updated on
1 min read

சென்னை: துறை​முகம் தொகு​தி​யில் அதிமுக வேட்​பாள​ருக்கு ஆதர​வாக ரூ.10 ஆயிரத்​துக்​கான கூப்​பன் வாக்​காளர்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​வ​தாக தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் முடித்து வைத்​துள்​ளது.

சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் அமைச்​சர் சேகர்​பாபு போட்​டி​யிடு​கி​றார்.

அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் ராயபுரம் மனோ என்ற மனோகருக்கு ஆதர​வாக தொகுதி முழு​வதும் ஒவ்​வொரு வீட்​டுக்​கும் க்யூ-ஆர் கோடுடன் கூடிய ரூ.10 ஆயிரத்​துக்​கான டோக்​கன் விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாகக் கூறி வழக்​கறிஞர் கே.ர​வீிந்​திரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகி​யோர் அடங்​கிய அமர்வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், இதுதொடர்​பாக வந்த புகார்​களின் அடிப்​படை​யில் பறக்​கும்​படை​யினர் சோதனை நடத்​தி​ய​தாக​வும், ஆனால், மனு​தா​ரர் கூறியது​போல எதை​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என்​றும், இதுதொடர்​பாக போலீ​ஸாரின் உதவி​யுடன் விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தாக​வும் தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிப​தி​கள், மனு​தா​ரரின் புகார் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​வ​தாகக் கூறி வழக்கை முடித்து வைத்​தனர்.

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ.10,000 கூப்பன் வழங்குவதாக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
“உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்” - பியூஷ் கோயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in