அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

‘லஞ்சத்துக்கு சாட்சி’ என கூறிய விவகாரம்
அமைச்சர் மரிய வில்சன் | கோப்புப் படம்

அமைச்சர் மரிய வில்சன் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: பள்ளிகளுக்கு அனுமதி பெற திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கு தானே நேரடி சாட்சி எனவும் எனக் கூறிய நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டதற்கு தாமே நேரடி சாட்சி என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கடந்த 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் பேசியது தொடர்பாக, மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புகார் அளித்தேன்.

சட்டமன்றத்தில் அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வெறும் அரசியல் பேச்சாக புறந்தள்ளிவிட முடியாது. சட்டமன்றத்தில் உறுப்பினர் பேசும் பேச்சு தொடர்பாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டப் பாதுகாப்பு என்பது, சட்டமன்றத்துக்கு வெளியில் நடந்த இந்த நிகழ்வுக்கு பொருந்தாது.

எனது புகாரின் அடிப்படையில், அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

<div class="paragraphs"><p>அமைச்சர் மரிய வில்சன் | கோப்புப் படம்</p></div>
“சதிகார தவெக அரசை இனி எப்படி நம்புவது?” - செவிலியர்கள் பிரச்சினையில் நயினார் நாகேந்திரன் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in