​எ.வ.வேலு மற்றும் தவெக, காங். எம்எல்ஏ.க்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

​எ.வ.வேலு மற்றும் தவெக, காங். எம்எல்ஏ.க்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, காங்​கிரஸ் எம்​எல்ஏ தாரகைகத்​பட், தவெக எம்​எல்​ஏ-க்​களின் வெற்றியை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் தேர்​தல் ஆணை​யம் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட எம்​எல்​ஏ-க்​கள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரு​வண்​ணா​மலை தொகு​தி​யில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​ச​ரான எ.வ.வேலு தன்னை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட தவெக வேட்​பாள​ரான அருள் ஆறு​முகத்​தை​விட 2 ஆயிரத்து 455 வாக்​கு​கள் அதி​கம் பெற்று வெற்றி பெற்​றார்.

இதையடுத்து எ.வ.வேலு வெற்றி பெற்​றதை எதிர்த்து அருள் ஆறு​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இதே​போல, பெருந்​துறை தொகு​தி​யில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்​ஏ-​வாக வெற்றி பெற்ற எஸ்​.ஜெயக்​கு​மார் தனது பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக-​வில் இணைந்​தார்.

அவரிடம் 9 ஆயிரத்து 693 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்த திமுக வேட்​பாள​ரான தோப்பு வெங்​க​டாச்​சலம், ஜெயக்​கு​மார் வெற்றி பெற்​றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

குளச்​சல் தொகு​தி​யில் காங்​கிரஸ் எம்​எல்​ஏ-​வாக தாரகை கத்​பட் வெற்றி பெற்​றதை எதிர்த்து அவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சிபிஎம் வேட்​பாளர் அந்​தோணி முத்​து​வும், ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​வின் தேர்​தல் வெற்​றியை எதிர்த்து அவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சி.கீ​தா​வும், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்​எல்ஏ கே.சிவக்​கு​மார் வெற்றி பெற்​றதை எதிர்த்து திமுக வேட்​பாளர் ஆர்​.​ராஜேந்​திரனும், சீர்​காழி தொகுதி மதி​முக எம்​எல்ஏ ஆர்​.செந்​தில்​செல்​வன் வெற்​றியை எதிர்த்து எஸ். வாசு என்​பவரும் தேர்​தல் வழக்​கு​களை தொடர்ந்​திருந்​தனர்.

இந்த தேர்​தல் வழக்​கு​களை விசா​ரித்த நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட எம்​எல்​ஏ-க்​கள் மற்​றும் தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூலை 21-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

இதே​போல, போடி நாயக்​க​னூர் தொகு​தி​யில் ஓ.பன்​னீர்​செல்​வம், வெற்றி பெற்​றதை எதிர்த்து டி.கண்​ணன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

அதில் மாவட்ட நூலக கண்​காணிப்​பாள​ராக பணிபுரிந்​ததை சுட்​டிக்​காட்டி தனது வேட்​புமனுவை தேர்​தல் அதி​காரி நிராகரித்து விட்​ட​தால், ஓ.பன்​னீர்​செல்​வம் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும், என அதில் கோரி​யுள்​ளார்​. இந்​த வழக்​கு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்ளது.

​எ.வ.வேலு மற்றும் தவெக, காங். எம்எல்ஏ.க்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை | வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம்பெண்: காதலன் உட்பட 5 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in