2011-ல் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இறுதி விசாரணை தொடக்கம்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலின் 2011 தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

தமிழகத்​தில் கடந்த 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் கட்​சி​யின் அப்​போதைய பொருளாளர் ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முகவில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார்.

தேர்​தலின்போது தேர்​தல் ஆணையம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்​டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடுபட்​ட​தாக​வும் எனவே அவர், வெற்​றி பெற்​றது செல்​லாது என அறிவிக்​கக் கோரி​யும் சைதை துரை​சாமி உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. சைதை துரை​சாமி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் டிஎஸ் நாயுடு ஆஜராகி, கொளத்​தூர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரு​மங்கலம் ஃபார்​முலா பயன்​படுத்​தப்பட்​டு, வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்​யப்​பட்​டது. இதற்கு போலீஸ் அதி​காரி​களும் உதவினர். தேர்​தல் வாக்கு எண்​ணிக்​கையின்​போது தேர்​தல் அதி​காரி​களும் பாரபட்​ச​மாக நடந்தனர் என வாதிட்​டார்.

ஸ்டா​லின் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் வாதிடும்​போது, அரசி​யல் கட்​சி களுக்கு தேர்​தல் செல​வின கட்​டுப்​பாடு விதிக்​கப்​ப​டாதது மிகப் பெரிய பிரச்​சினை​யாக உள்​ளது என்​றார். அப்​போது வழக்​கறிஞர் டி. எஸ். நாயுடு குறுக்​கிட்டு வாதிடும்​போது, பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் நபர் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரை​யும், எம்.பி. தேர்​தலில் ரூ.100 முதல்

150 கோடி வரை செல​விடுவ​தாகவும் தெரி​வித்​தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இது குறித்து கண்காணிப்பு தேவை என கருத்து தெரி​வித்​தனர்.

அரசி​யல் கட்​சிகளுக்கு தேர்தல் செல​வின கட்​டுப்​பாடு விதிக்கப்​ப​டாதது குறித்து கடந்த 10 ஆண்​டு​களாக நாடாளு​மன்​றத்​தில் குரல் எழுப்பி வரு​வ​தாக​வும், பார் கவுன்​சில் தேர்​தலில் அதிக அளவில் பணம் செல விடப்​படு​வ​தாக​வும் கபில் சிபல் தெரி​வித்​தார். மேலும் மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் கவுன்​சிலர் வேட்​பாளர் ரூ.100 கோடி அளவுக்கு செல​விடுவதாக கூறப்​படு​கிறது என்​றும்​ கபில்​ சிபல்​ குறிப்​பிட்​டார்​.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின்</p></div>
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in