

தாராபுரம்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் டவுன் பெரியார் சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் குழந்தைகளை பேச வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாராபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.