தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 75 ஆயிரம் வாக்​குச்​சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்​வது மற்​றும் வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்தி கண்​காணிப்​ப​தற்​கான தேர்​தல் ஆணைய டெண்​டரை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கு​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

தமிழகத்​தில் வரும் ஏப்​.23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்​வதற்​கும், வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் 3 ஆயிரத்து 744 கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்தி வீடியோ பதிவு செய்​வதற்​கும் தேர்​தல் ஆணை​யம் டெண்​டர் கோரியது.

இந்த டெண்​டரில் ஆண்​டுக்கு ரூ.100 கோடி வரை மொத்த வணிக விற்​பனை​யில் ஏற்​கனவே ஈடு​பட்டு இருக்​கும் நிறு​வனங்​கள் மட்​டுமே பங்​கேற்க முடி​யும் என்​றும், வாக்​குச்​சாவடிகளில் ஒரு லட்​சத்து 50 ஆயிரம் கேம​ராக்​களை பொருத்​திய முன்​அனுபவ​மும், வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் 2 ஆயிரத்து 500 கேம​ராக்​களை பொருத்​திய முன்​அனுபவ​மும் பெற்​றிருக்க வேண்​டும் என்​றும் பல்​வேறு நிபந்​தனை​களை விதித்​திருந்​தது.

தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நிபந்​தனை​களை எதிர்த்து, டெல்​லியை சேர்ந்த இன்​னோவேட்டிவ் இந்​தியா லிமிடெட் மற்​றும் சென்​னையை சேர்ந்த ஐ-நெட் செக்​யூர் லேப்ஸ் ஆகிய நிறு​வனங்​கள் சார்​பில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்​கு​கள், தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது , மனு​தா​ரர்​கள் நிறு​வனம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் சதீஷ் பராசரன், சித்​தார்த் மிருதுல், வி.​ராக​வாச்​சாரி ஆகியோர் ஆஜராகி, “இந்த டெண்​டரில் பங்​கேற்க விரும்​பும் நிறு​வனங்​கள் ரூ. 100 கோடி வரை மொத்த விற்​பனை வரு​வாய் பெற்​றிருக்க வேண்​டும் என தமிழகத்​தில் மட்​டுமே நிபந்​தனை விதிக்​கப்​பட்​டுள்​ளது, வெப்-காஸ்டிங் செய்​யும் நிறு​வனங்​களே வாக்கு எண்​ணிக்கை மையங்​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்த அனுபவம் பெற்​றவை என்​ப​தால் தேர்​தல் ஆணை​யத்​தின் புது​வித​மான நிபந்​தனை​கள் தேவையற்​றது.

எனவே, அந்த டெண்​டரை ரத்து செய்து புதி​தாக டெண்​டர் கோர உத்​தர​விட வேண்​டும்” என வாதிட்​டனர். தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், “தேர்​தலில் வாக்​குப்​ப​திவு என்​பதும், வாக்கு எண்​ணிக்கை என்​பதும் இரு​வேறு நிலைகள்.

வெப்-காஸ்டிங் மற்​றும் கண்​காணிப்​புக்​கென தனித்​தனி​யாக அனுபவம் பெற்​றுள்ள நிறு​வனங்​களுக்கு அப்​பணி​களை வழங்​கி​னால் மட்​டுமே தேர்​தலை வெளிப்​படை​யாக​வும், நேர்​மை​யாக​வும் நடத்தி மக்​களின் நம்​பிக்​கையை பெற முடி​யும்.

இது​போன்ற நிபந்​தனை​கள் வழக்​க​மானது​தான். தேர்​தல் நடை​முறை​கள் தொடங்​கி​விட்ட நிலை​யில், டெண்​டர் இன்று (நேற்​று) இறுதி செய்​யப்​பட​வுள்​ளது. இந்த சூழலில் டெண்​டரை ரத்து செய்ய முடி​யாது” என வாதிட்​டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “குறிப்​பிட்ட நிறு​வனங்​களுக்கு சாதக​மாக டெண்​டர் நிபந்​தனை​களை மாற்றி அமைக்க முடி​யாது என்​ப​தா​லும், பாரபட்​ச​மாக இந்த டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது என்​பதை நிரூபிக்​காத​தா​லும் தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்​கை​களில் குறுக்​கீடு செய்ய முடி​யாது.

தொழில்​நுட்​பம் மற்​றும் நிர்​வாக நிபுணத்​து​வம் பெற்ற அதி​காரி​களால்​தான் டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது. எனவே. இந்த டெண்​டரை ரத்து செய்ய முடி​யாது” எனக்​கூறி வழக்​கு​களை தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in