மது விலை ரூ.10 உயர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மது விலை ரூ.10 உயர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: ​டாஸ்​மாக் மது​பான விலை ரூ.10 உயர்த்​தப்​பட்​டதை எதிர்த்து கேளிக்கை விடு​தி​கள், நட்​சத்​திர ஓட்​டல்​கள் சங்​கம் சார்​பில் தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசு, டாஸ்​மாக் நிர்​வாகம் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து எப்​எல்​-2, எப்​எல்-3 மது​பான விற்​பனை உரிமம் பெற்​றுள்ள கேளிக்கை விடு​தி​கள் மற்​றும் நட்​சத்​திர ஓட்​டல்​கள் சங்​கம் சார்​பில் அதன் செய​லா​ளர் எம்​.ஜெய்​கணேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

உயர் நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் காலி மதுபான பாட்​டில்​களை திரும்​பப் பெறும் வகை​யில் மது​விலக்கு அமலாக்​கத் துறை ஆணை​யர் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு சுற்​றறிக்கை பிறப்​பித்​தார்.

அதன்​படி, ஏற்​கெனவே டாஸ்​மாக் கடைகளில் மது​பானங்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக வசூலிக்​கப்​பட்​டு, பாட்​டிலை திருப்பி வழங்​கும்​ போது ரூ.10 திருப்​பித் தரப்​பட்​டது.

இந்த நிலை​யில், தற்​போது சுற்​றுச்​சூழல், சமூகநல செஸ் வரி​யாக மது​பானங்​களின் அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யில் ரூ.10 உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இது சட்​ட​விரோதம்.

மேலும், கேளிக்கை விடு​தி​களில் உறுப்​பின​ராக உள்​ளவர்​கள் மது​பானங்​களை வாங்கி தங்​கள் வீட்​டுக்​கும் எடுத்​துச் செல்​லலாம். அவர்​களது வீடு​களுக்கு தேடிச் சென்று காலி பாட்​டில்​களை சேகரிக்க முடி​யாது.

எனவே இதுதொடர்​பாக மது​விலக்கு அமலாக்​கத் துறை ஆணை​யர் பிறப்​பித்த சுற்​றறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் இதுதொடர்​பாக தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் நிர்​வாகம் பதில் அளிக்க உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை அடுத்த வாரத்​துக்​கு தள்​ளி​வைத்​தார்​.

மது விலை ரூ.10 உயர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.1 கோடி போதை மூலப்பொருள் பறிமுதல்: ஹைதராபாத்தில் இருந்து கடத்தி வந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

X