தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்: முதல்வரின் செயலருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்: முதல்வரின் செயலருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்​வரின் செயலர் உமா​நாத், தேர்​தல் நடத்தை விதி​களை மீறி செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி தொடரப்​பட்ட வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாஜக வழக்​கறிஞர் ஏ.மோகன்​தாஸ் தாக்​கல் செய்த மனு​வில், ‘தமிழக முதல்​வரின் செயல​ரான உமா​நாத், தேர்​தல் நடத்தை விதி​களை மீறி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு தன்​னிச்​சை​யாக உத்​தர​வு​களை பிறப்​பித்து வரு​கிறார். அவர் மீது தேர்​தல் நடத்தை விதி​களின்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில், ‘ஐஏஎஸ் அதி​காரி​யான உமா​நாத்​துக்கு எதி​ராக மனு​தா​ரர் எந்த குற்​றச்​சாட்​டை​யும் குறிப்​பிட்டு முன்​வைக்​க​வில்​லை. தேர்​தல் விதி​களை மீறி அவர் செயல்​பட்​டார் என்​ப​தற்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, முதல்​வரின் செயலர் உமா​நாத் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை தள்​ளு​படி செய்து நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்: முதல்வரின் செயலருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
40 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் | ஐபிஎல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in