மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு

அவசர வழக்காக விசாரிக்க இன்று முறையீடு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலை ரத்து செய்ய வேண்டும் அல்​லது வாக்கு எண்​ணிக்​கையை நிறுத்தி வைக்க வேண்​டும் எனக் கோரி உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்பேரவைத் தேர்​தலுக்​குப் பிறகு, சில பேரவை உறுப்​பினர்​கள் தாமாக முன்​வந்து தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர், இதனால் சில தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டது.

அவ்​வாறு காலி​யான​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு தொகு​தி​களுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்ள இடைத்​தேர்​தல் செலவை வேட்​பாளர்​கள் ஏற்​கும் வகை​யில் உரிய நடை​முறையை வகுக்​கும் படி சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் சுதன் தாக்​கல் செய்த பொதுநல வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து தீர்ப்​பளித்​திருந்​தது.

இதனை எதிர்த்து உச்​ச நீ​தி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் சுதன் மேல்​முறை​யீட்டு மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில் கூறியிருப்பதாவது: தற்​போது நடை​பெற​விருக்​கும் இடைத்​தேர்​தல் உறுப்​பினர்​களின் மரணம் அல்​லது தகுதி நீக்​கம் ஆகிய​வற்​றால் ஏற்​பட​வில்லை மாறாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​எல்​ஏக்​கள் தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்​த​தால் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்​பட்​டு, மக்​களின் வரிப்​பணம் வீணடிக்​கப்​படு​கிறது.

மேலும் இடைத் தேர்​தல் நடை​பெறு​வதற்கு காரண​மான நபர்​களே தற்​போது வேறு ஒரு கட்​சி​யின் சார்​பாக அந்​தத் தொகு​தி​களில் வேட்​பாளர்​களாக களம் இறங்​கி​யுள்​ளனர்.

இவ்​வாறு எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு மீண்​டும் அதே தொகு​தி​யில் வேறு கட்சி சார்​பாக போட்​டி​யிடும் அந்த வேட்​பாளர்​கள் இடைத் தேர்​தலுக்​கான செலவை வைப்பு நிதி​யாகச் செலுத்த வேண்​டும் அல்​லது இவ்​வாறு நடப்​பதை தடுக்க உரிய விதி​களை வகுக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

அது​வரை மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களுக்​கான இடைத்தேர்​தல்​களுக்​குத் தடை விதிக்க வேண்டும் அல்​லது வாக்கு எண்​ணிக்​கையை நிறுத்​திவைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைத்​துள்​ளார். இந்த மேல்​முறை​யீட்டு மனுவை அவசர​மாக வி​சா​ரணைக்கு எடுக்​கக்​கோரி மனு​தா​ரர் சுதன் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் இன்று முறை​யீடு செய்​ய உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

உச்ச நீதிமன்றம்
விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in