சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் திறன் மேம்பாடு: ரூ.35.97 கோடியில் புதிய ஆலோசனை ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் திறன் மேம்பாடு: ரூ.35.97 கோடியில் புதிய ஆலோசனை ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல்​கட்ட வழித்​தடத்​தில் போக்​கு​வரத்​துத் திறனை மேம்​படுத்​து​வதற்​காக, திட்ட மேலாண்மை மற்​றும் விரி​வான வடிவ​மைப்பு ஆலோ​சனை​களை வழங்​கு​வதற்​கான புதிய ஒப்​பந்​தம் ரூ.35.97 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் நடை​பெற்ற இந்​நிகழ்​வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்​குநர் மனோஜ் கோயல் (அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம்), ஏகாம் இந்​தியா நிறுவன மண்டல இயக்​குநர் சுனில் குமார் ரெட்டி காசா, நிப்​பான் கோயி இந்​தியா நிறுவன இணை இயக்​குநர் சதீஷ்லால் சுனேஜா ஆகியோர் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை பொது மேலா​ளர் கே.மணி வெங்கட குமார் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னை மெட்ரோ ரயில்​பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி​கரித்து வரு​வ​தால், முதல்​கட்ட வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில்​களின் எண்​ணிக்​கையை உயர்த்​த​வும், நிலை​யங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பக் கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​த​வும் இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

பயணி​கள் சேவை எந்​த​வித தடங்​கலும் இன்​றி, மிக​வும் பாது​காப்​பாக தொடர்​வதை உறுதி செய்​த​வாறே இந்த மேம்​பாட்​டுப் பணி​கள் அனைத்​தும் மேற்​கொள்​ளப்​படும்.

இத்​திட்​டத்​தின் கீழ், முதல் கட்​ட​வழித்​தடங்​களை மேம்​படுத்​து​வதற்​கான கட்​டிடக் கலை, ரயில் பாதைகள், மின்​சார மற்​றும் இயந்​திர​வியல் பணி​களுக்​கான விரி​வான திட்ட வரைபடங்​களைத் தயாரித்​தல், ஒப்​பந்​தப் புள்​ளி​களை உரு​வாக்​குதல் மற்​றும் கட்​டு​மானப் பணி​களை நேரில் கண்​காணித்து நிர்​வகித்​தல் போன்ற அனைத்து தொழில்​நுட்ப ஆலோ​சனை​களை​யும் மேற்​பார்​வைப் பணி​களை​யும் இந்த ஆலோ​சனை நிறு​வனம் முழு​மை​யாக மேற்​கொள்​ளும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் திறன் மேம்பாடு: ரூ.35.97 கோடியில் புதிய ஆலோசனை ஒப்பந்தம்
குற்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாய வழிமுறை​ என்ன? - சுற்றறிக்கை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in