காங்கிரஸ் கட்சியினரே தவெக சென்றால் அதை தடுக்க முடியாது: திருநாவுக்கரசர் கருத்து

திருநாவுக்கரசர் | கோப்புப்படம்
திருநாவுக்கரசர் | கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சி: காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து தவெக​வுக்கு யாரேனும் சென்​றால் அதை யாரும் அணை போட்டு தடுக்க முடி​யாது என காங்​கிரஸ் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார்.

காம​ராஜர் பிறந்த நாளை​யொட்​டி, திருச்சியில் காங்​கிரஸ் சார்​பில் அருணா​சலம் மன்​றத்​தில் நேற்று நலத்திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நடை​பெற்றது.

இதில் பங்​கேற்க வந்த அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் 60 ஆண்​டு​களுக்கு முன்பே தேர்​தலுக்கு முன்பு ஒரு கூட்​ட​ணி, தேர்​தலுக்​குப் பிறகு ஒரு கூட்​டணி இருந்​துள்​ளது. நாட்​டில் தற்​போது பல மாநிலங்​களில் பெரும்பான்மை இல்​லாத இடங்​களில், பாஜக மற்ற கட்​சிகளை உடைத்து ஆட்​சி​யில் அமர்​கிறது.

எனவே, தமிழகத்​தில் தேர்​தலுக்​குப் பிறகு புதிய கூட்​டணி அமைந்​திருப்​பது புதிது கிடை​யாது. ஆனால், கூட்​டணி மாறிய​வுடன் அரசி​யல் கட்​சிகள் ஒன்​றையொன்று திட்​டிக் கொள்​வது தேவையற்​றது.

தமிழகத்​தில் திமுக ஆட்சி வேண்​டாம் என்​று​தான் மக்​கள் ஆட்சி மாற்​றத்தை கொண்டு வந்​துள்​ளனர். எனவே, முந்​தைய திமுக ஆட்சி குறித்து நான் தனி​யாக எந்​தச் சான்​றிதழும் கொடுக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை.தவெக ஆட்​சி​யில் லஞ்​சம், ஊழல் குறைந்​துள்​ளது. பத்​திரப் பதிவு, கட்​டு​மான அனு​மதிபெறு​வது ஆகிய நடை​முறை​களில் லஞ்​சம் அழிக்​கப்​பட்​டு​விட்​டது. இதனால் மக்​கள் மகிழ்ச்​சி​யாக உள்​ளனர். காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து தவெக​வுக்கு யாரேனும் சென்​றால் அதை யாரும் அணை போட்டு தடுக்க முடி​யாது. இவ்வாறு கூறினார்.

திருநாவுக்கரசர் | கோப்புப்படம்
“இளைஞர்களுக்கு எதிரான பிரதமர்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in