தவெகவை கணிக்க முடியாமல் மதுரை வேட்பாளர்கள் கலக்கம்

தவெகவை கணிக்க முடியாமல் மதுரை வேட்பாளர்கள் கலக்கம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகளில் தவெக பெறும் வாக்குகளை பொறுத்தே வெற்றி, தோல்வி முடிவாகும் எனக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் திமுக 7 தொகுதிகளும், அதிமுக 8 தொகுதிகளிலும் நேரடியாக களம் இறங்குகின்றன. மதுரை தெற்கு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் பூமிநாதனை திமுக களம் இறக்கி உள்ளது.

அதுபோல், மத்திய தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

சின்னங்கள் அடிப்படையில் திமுகவும், அதிமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. பல தொகுதிகளில் திமுக-அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தொகுதிகளில் தவெக பெறும் வாக்குகள் அடிப்படையிலேயே வெற்றி, தோல்வி முடிவாகும் என்று கூறப்படுகிறது.

தவெக வேட்பாளர்களுக்கு விஜய் மீது உள்ள அபிமானத்துக்காகவே பெண்களும், தொண்டர்களும் வாக்களிப்பார்கள்.

தவெகவால் யார் வாக்குகள் பிரியும் என்பதைக் கணிக்க முடியாமல் திமுக, அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

தவெகவை கணிக்க முடியாமல் மதுரை வேட்பாளர்கள் கலக்கம்
விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in