

மதுரவாயல் தொகுதியில் 144-வது வட்டத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காரம்பாக்கம் க.கணபதி.
தொழிற்சாலைகள் நிறைந்த மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 21 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக - காரம்பாக்கம் க.கணபதி
திமுக வேட்பாளராகப் போட்டியிடும் க.கணபதி, திறந்த வாகனத்தில் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி., உள்பட பல தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
திமுகவின் சாதனைகள், இத்தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக - முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின்
இத் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்சமின், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலப்பாக்கத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.பெஞ்சமின்
இவருக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட கூட்டணி கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி - ரேவதி
நாதக வேட்பாளரான ரேவதி, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
காரம்பாக்கம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி.
தரமான மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தூய்மையான குடிநீர், முழு மதுவிலக்கு, ஆடு, மாடு வளர்ப்பு ஊக்குவிப்பு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக - ரேவந்த் சரண்
தவெக வேட்பாளரான ரேவந்த் சரண், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மதுரவாயல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ரேவந்த் சரண்
மேலும், சுத்தமான, பசுமையான பகுதியாக மதுரவாயல் மாற நடவடிக்கை எடுப்பேன் என்றும் பிரச்சாரம் செய்துவ வருகிறார்.
வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரத்தில் மதுரவாயல் தொகுதியின் தேர்தல் களம் அனலாய் தகிக்கிறது.