விருகம்பாக்கம் தொகுதியில் 4 முனைப் போட்டியில் வேட்பாளர்கள் விறுவிறுப்பு

அதிமுக வேட்பாளர் விருகை ரவியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

அதிமுக வேட்பாளர் விருகை ரவியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

படங்கள்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: விருகம்பாக்கம் தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமிழர் மற்​றும் தமிழக வெற்​றிக் கழகம் ஆகிய கட்​சிகளிடையே நில​வும் 4 முனைப் போட்​டி​யால் தொகுதி முழு​வதும் தேர்​தல் பணி விறு​விறுப்​படைந்​துள்​ளது.

திமுக சார்​பில் தற்​போதைய எம்​எல்ஏ பிர​பாகர் ராஜா மீண்​டும் களம் காண்​கிறார். அதி​முக சார்​பில் முன்​னாள் எம்​எல்ஏ விருகை ரவி, நாதக சார்​பில் சந்​தோஷ், தவெக சார்​பில் சபரி​நாதன் ஆகியோர் களத்​தில் உள்​ளனர்.

இவர்​களு​டன் அண்ணா புரட்​சித் தலை​வர் அம்மா திரா​விட முன்​னேற்​றக் கழகத்​தின் ராய் ஜார்​ஜ், இந்​திய குடியரசுக் கட்​சி​யின் ஜெகதீஷ், நாம் இந்​தி​யர் கட்​சி​யின் பால​முரு​கன் மற்​றும் 15 சுயேச்சை வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்.

வீதி வீதியாகச் சென்று பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா.

வீதி வீதியாகச் சென்று பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா.

திமுக - ‘முன்​மா​திரி தொகு​தி’ முழக்​கம்

திமுக வேட்​பாளர் பிர​பாகர் ராஜா, கடந்த 5 ஆண்​டு​களில் தான் செய்த பணி​களைப் பட்​டியலிட்டு ஆதரவு திரட்டி வரு​கிறார். குறிப்​பாக, கோயம்​பேடு சந்தை மற்​றும் குடி​யிருப்பு பகு​தி​களில் சூறாவளி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் அவர், “விரு​கம்​பாக்​கத்​தின் நீண்​ட​கால மழைநீர் வடி​கால் பிரச்​சினைக்​குத் தீர்வு கண்​டுள்​ளோம்.

மகளிர் இலவசப் பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்​டங்​கள் தொடரவும், விரு​கம்​பாக்​கத்தை ஒரு முன்​மா​திரி தொகு​தி​யாக மாற்​றவும் தனக்கு வாக்களிக்க வேண்டும்’’ என பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதி​முக - ‘பொற்​கால திட்டங்கள்’ கிடைக்க அழைப்பு

அதி​முக வேட்​பாளர் விருகை ரவி, திமுக அரசின் மீதான விமர்​சனங்​களை முன்​வைத்து பிரச்​சா​ரம் செய்​கிறார். “கடந்த 5 ஆண்​டு​களில் தொகு​தி​யில் எந்த வளர்ச்​சிப் பணி​களும் நடை​பெற​வில்​லை. மக்​களின் அடிப்​படைத் தேவை​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. அதி​முக ஆட்​சிக் காலத்​தில் இருந்த பொற்​கால திட்​டங்​கள் மீண்​டும் கிடைக்க எனக்கு வாக்​களி​யுங்​கள்” என பிரச்சாரம் செய்து வரு​கிறார்.

வாக்காளர்களை தனித்தனியாக  சந்தித்து வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் சந்தோஷ்.

வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் சந்தோஷ்.

நாதக - திட்​டங்​கள் முன்​வைப்பு

நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சந்​தோஷ், தனது பிரச்​சா​ரத்​தில், ‘பல தலை​முறை​களாக வசிக்​கும் மக்​களுக்​குப் பட்டா வழங்​குதல், தொகுதி நிதியை வெளிப்​படை​யாகக் கண்​காணிக்க இணை​யதளம், கோயம்​பேடு சந்தை கழி​வு​களி​லிருந்து பயோ-​காஸ் தயாரித்​தல்’ போன்ற திட்​டங்​களை முன்​வைத்து வாக்கு சேகரித்து வரு​கிறார்.

இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் சபரிநாதன்.

இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் சபரிநாதன்.

தவெக - மாற்று அரசி​யல் குறிக்​கோள்

தமிழக வெற்​றிக் கழக வேட்​பாளர் சபரி​நாதன், “திரா​விடக்கட்​சிகளுக்கு மாற்​றாக, நேர்​மை​யான மற்​றும் அடிப்​படை வசதி​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் புதிய அரசி​யலை விரு​கம்​பாக்​கத்​தில் தொடங்​கு​வோம்” என அவர் எழுச்​சி​யுடன் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். பிர​தான கட்சி வேட்பாளர்கள் 4 பேரும் வீடு வீடாகச் சென்று மக்​களைச் சந்​திப்​ப​தால் தேர்​தல் களம் விறுவிறுப்​படைந்​துள்​ளது.

அதிமுக வேட்பாளர் விருகை ரவியை ஆதரித்து பிரச்சாரம் செய்த பொதுச் செயலாளர் பழனிசாமி.

“மாதவரத்தில் 10 ஆண்டுகளில் 5,551 பணிகள் நிறைவேற்றம்” - ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் தீவிர பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in