

சோழிங்கநல்லூரில் திமுக வேட்பாளருக்கு சேவல், வேல் பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர்: சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். அரவிந்த் ரமேஷ் சென்னை மாநகராட்சி 199 வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது 199 வது வட்ட திமுக துணை செயலாளர் க.ராஜேஷ் குமார் ஏற்பாட்டில் வெற்றியின் அடையாளமாய் வேட்பாளர்க்கு வேலும், செவலும் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
அதை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சங்கர் ஏற்பாட்டில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வேட்பாளர் மீது பூ மழை பெய்து வரவேற்று ஆள் உயர மாலை அணிவித்து செங்கோல் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் திராவிட ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் எம். கிறிஸ்துதாஸ் போட்டியிடுகிறார். இவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்களிக்கும் பள்ளிக்கரணை பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
பள்ளிக்கரணையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திராவிட ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர்.
அப்போது அவர் பேசும்போது பள்ளிக்கரணை பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் ஏராளமான வசித்து வருகின்றனர்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வரப்படாமல் உள்ளது பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.