13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 20) இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதி லேசான மழை பெய்யக்கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in