மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு
Updated on: 
2 min read

சென்னை: மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் நாளை (அக்​.4) மாலை 6 மணி​யுடன் முடிவடை கிறது. வாக்​குப்​ப​திவு அக்​டோபர் 6-ம் தேதி நடை​பெற உள்​ளது.

கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு மது​ராந்​தகம் (தனி) தொகு​தி​யில் வெற்றி பெற்ற மரகதம் குமர​வேல், தாராபுரம் (தனி) தொகு​தி​யில் வெற்றி பெற்ற சத்​ய​பாமா இரு​வரும் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தனர். அதே​போல், அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோ​ரும் அடுத்​தடுத்து தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தனர். அவர்​கள் அனை​வரும் தவெக-​வில் இணைந்​தனர். பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இதைத்​தொடர்ந்​து, 7 தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு தொகு​தி​களுக்​கும் இடைத்​தேர்​தல் நடத்​து​வதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் செப்​டம்​பர் 7-ம் தேதி வெளி​யிட்​டது. நீதி​மன்ற வழக்​கு​கள் காரண​மாக எஞ்​சி​யுள்ள 5 தொகு​தி​களுக்கு தேர்​தல் அறிவிக்​கப்​பட​வில்​லை.

மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​டோபர் 6-ல் இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் செப்​.9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி முடிவடைந்​தது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் தவெக சார்​பில் மரகதம் குமர​வேல், திமுக சார்​பில் பரந்​தாமன், அதி​முக சார்​பில் கணிதா சம்​பத், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சுகந்​தி, நாம் தமிழர் கட்சி சார்​பில் ஜானகி​ராமன் மற்​றும் சுயேட்சி வேட்​பாளர்​கள் என மொத்​தம் 28 பேர் களத்​தில் உள்​ளனர்.

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் தவெக சார்​பில் சத்​ய​பா​மா, திமுக சார்​பில் சுகன்​யா, அதி​முக சார்​பில் பானு​ம​தி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணன், நாதக சார்​பில் கார்த்​திகா உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர். தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் செப்​.25-ம் தேதி​யும் நேற்​றும் மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்​தார். செப்​.30-ம் தேதி தாராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்த முதல்​வர், மீண்​டும் நாளை அங்கு பிரச்​சா​ரத்​துக்கு செல்​கிறார்.

திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும், கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சிகளின் மாநில நிர்​வாகி​களும் பிரச்​சா​ரம் செய்​தனர். நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

தவெக. திமுக, அதி​முக கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் தொடர்ந்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரும் நிலை​யில், இரு தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் நாளை மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. இதனால், இறு​திக்​கட்ட வாக்கு சேகரிப்​பில் வேட்​பாளர்​களும் கட்சி நிர்​வாகி​களும் தீவிரம் காட்டி வரு​கின்​றனர்.

அக்​.6-ம் தேதி வாக்​குப்​ப​தி​வும், 9-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யும் நடை​பெறுகிறது. வாக்​குப்​ப​திவையொட்​டி தொகு​திமுழு​வதும்​ பலத்​த பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​பட்​டு உள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in