‘இனிமேல் புகையிலை பொருட்கள் விற்கமாட்டோம்’ - மனைவியுடன் கடிதம் அளித்து ஜாமீன் பெற்ற வியாபாரி!

‘இனிமேல் புகையிலை பொருட்கள் விற்கமாட்டோம்’ - மனைவியுடன் கடிதம் அளித்து ஜாமீன் பெற்ற வியாபாரி!
Updated on
1 min read

மதுரை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற வழக்கில் கைதான மளிகைக் கடை வியாபாரிக்கு, இனிமேல் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யமாட்டேன் என கடிதம் அளித்ததன் பேரில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸார், 525 கிலோ தடை செய்யப்பட் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூத்து பகுதியைச் சேர்ந்த முருகேசன் (36) என்பவரை 20.11.2025ல் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரை ஆஜர்படுத்தவும், அவரது மனைவி ஆஜராகவும் உத்தரவிட்டார். அவர்களுக்கு புகையிலை மற்றும் கூலிப் பொருட்களால் நிகழும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர் இருவரும் இனிமேல் புகையிலை பொருட்கள் அல்லது கூலிப் பொருட்களை விற்க மாட்டோம் கைப்பட உறுதிமொழி கடிதம் அளிக்கவும் கூறப்பட்டது.

அதன்படி இருவரும் தாங்கள் நடத்தி வந்த மளிகை கடையில் பின்விளைவுகள் தெரியாமல் புகையிலை மற்றும் கூலிப் பொருட்களை விற்று வந்தோம். இனி வரும் காலங்களில் புகையிலை பொருட்களை விற்கமாட்டோம் என உறுதியளிக்கிறோம் என கடிதம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் தேனி ஓடைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி வங்கி கணக்கில் ரூ.3 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்.

இப்பணத்தை பள்ளியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைக்கு தேவையான பொருட்களை வாங்க தலைமை ஆசிரியர் பயன்படுத்த வேண்டும். மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணையின் போது தலைமறைவாகக்கூடாது, சாட்சிகளை கலைக்கவோ, தடயங்களை அழிக்கவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

‘இனிமேல் புகையிலை பொருட்கள் விற்கமாட்டோம்’ - மனைவியுடன் கடிதம் அளித்து ஜாமீன் பெற்ற வியாபாரி!
‘தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்!’ - திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in