அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னையில் பேருந்து பயண நடை இன்று முதல் அதிகரிப்பு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னையில் பேருந்து பயண நடை இன்று முதல் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி மாணவ, மாணவி​கள் நலன் கருதி சென்​னை​யில் காலை, மாலை வேளை​களில் 41 பேருந்​துகளின் பயண நடைகள் இன்று முதல் அதி​கரிக்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்து போக்​கு​வரத்து துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சைதாப்​பேட்டை தொகு​தி​யில் உள்ள 2 அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு பேருந்து வசதி தொடர்​பாக போக்​கு​வரத்து துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபனிடம் சைதாப்​பேட்டை எம்​எல்ஏ அருள் பிர​காசம் கோரிக்கை விடுத்​தார்.

அதன் அடிப்​படை​யில், சைதாப்​பேட்டை மற்​றும் பல்​வேறு பகு​தி​களில் பள்​ளி​கள் அமைந்​துள்ள இடங்​களில் மாநகர் போக்​கு​வரத்​துக் கழக அலு​வலர்​களைக் கொண்டு கடந்த 10 நாட்​களாக கள ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில், அப்​பகு​தி​களைச் சேர்ந்த மாணவர்​கள், பெற்​றோர், ஆசிரியர்​களின் கருத்​துகள் அடிப்​படை​யில் ஓர் அறிக்கை தயார் செய்​யப்​பட்​டு, முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, முதல்​வர் உத்​தர​வின்​படி, பள்ளி மாணவர்​கள் கூட்ட நெரிசலின்​றி, பாது​காப்​பான பயணம் மேற்​கொள்ள வசதியாக கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

அந்த வகை​யில், மாணவர்​கள் வசிப்​பிடத்​தில் உள்ள பேருந்து நிறுத்​தங்​களில் இருந்து பள்​ளிக்​கும், பள்​ளி​யில் இருந்து அந்த பேருந்து நிறுத்​தங்​களுக்​கும் காலை, மாலை வேளை​களில் மாணவர்​களை அழைத்​துச் சென்​றுவர ஏது​வாக, ஏற்​கெனவே சென்​னை​யில் உள்ள 25 பள்​ளி​களுக்கு 25 பேருந்​துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்​கப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் நாள் ஒன்​றுக்கு 41 சிறப்பு பேருந்​துகள் வாயி​லாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்​கப்​படு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னையில் பேருந்து பயண நடை இன்று முதல் அதிகரிப்பு
பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in