பிற மாநிலங்களைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகளுக்கு ஒரே நாளில் பதிவு: பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்

பிற மாநிலங்களைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகளுக்கு ஒரே நாளில் பதிவு: பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பிற மாநிலங்​களைப் போன்று தமிழகத்​தி​லும் ஆம்னி பேருந்​துகளுக்கு ஒரே நாளில் பதிவு செய்​யும் முறையை அறி​முகப்​படுத்த வேண்​டும் என உரிமை​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டம் ஏலகிரி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில், தமிழகத்​தில் செயல்​பட்டு வரும் 300-க்​கும் மேற்​பட்ட உரிமை​யாளர்​கள் கலந்து கொண்​டனர்.

ஆம்னி பேருந்து தொழிலின் தற்​போதைய நிலை, எதிர்​கால வளர்ச்​சி, தொழிலில் நில​வும் சவால்​கள், அரசின் கொள்​கைகள், உரிமை​யாளர்​களின் நலன் மற்​றும் ஆம்னி பேருந்து பயணி​களின் நலன் கரு​திய பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

மேலும், இந்​தி​யா​வின் தேசிய மற்​றும் மாநில நெடுஞ்​சாலைகளில் உள்ள அனைத்து 1,228 சுங்​கச்​சாவடிகளி​லும் ஆம்னி பேருந்​துகள் மற்​றும் பொதுப் போக்​கு​வரத்து வாக​னங்​களுக்கு முழு​மை​யான சுங்​கச்​சாவடி கட்டண விலக்கு வழங்க வேண்​டும், மத்​திய, மாநில அரசுகள் ஆம்னி பேருந்​துகளுக்​கான தனித்​து​வ​மான பர்​மிட் உரு​வாக்க வேண்​டும், மற்ற மாநிலங்​களைப் போல ஆம்​னி பேருந்​துகளுக்கு ஒரே நாளில் பதிவு செய்​யும் முறையை தமிழகத்​தி​லும் அறி​முகப்​படுத்த வேண்​டும்.

சுங்​கச்​சாவடி விலக்கு வழங்​கப்​படும் வரை, அனைத்து சுங்​கச்​சாவடிகளி​லும் பொதுப் போக்​கு​வரத்து பேருந்​துகளுக்​கான தனி வழிகள் அமைக்க வேண்​டும்.

மின்​சார பேருந்​துகளுக்கு வழங்​கப்​படும் வரிச்​சலுகைகளை 2030 வரை நீட்​டித்​து, ஊக்​குவிக்க வேண்​டும், மாநிலம் முழு​வதும் சார்​ஜிங் வசதி​களை விரிவுபடுத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in