

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நாளை முதல் (ஜன.7-ம் தேதி) தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் இடமாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.