நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம்: அமலாக்கத் துறை கடிதம் அடிப்படையில் வழக்கு பதிய கோரி மனு

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம்: அமலாக்கத் துறை கடிதம் அடிப்படையில் வழக்கு பதிய கோரி மனு
Updated on
1 min read

சென்னை: நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் பணி நியமனங்​களுக்கு லஞ்சம் பெறப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத்​துறை அனுப்​பி​யுள்ள கடிதத்​தின் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்து விசா​ரிக்க டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவுக்கு தமிழக அரசும், அமலாக்​கத்​ துறை​யும் பதிலளிக்க உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை மாவட்​டம் கள்​ளிக்​குடி தாலுகா மைத்​தான்​பட்​டியைச் சேர்ந்த கே.ஆ​தி​நா​ராயணன் என்​பவர்​,உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகத்​தில் கடந்த 2024-25-ம் ஆண்​டில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் உதவிப் பொறி​யாளர், இளநிலைப் பொறி​யாளர், சுகா​தார ஆய்​வாளர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன.

இதில் ஒரு பதவிக்கு ரூ.25 லட்​சம் முதல் 35 லட்​சம் வரை என மொத்​தம் ரூ.634 கோடி லஞ்​ச​மாக பெறப்​பட்​டுள்​ள​தாகக் கூறி அதற்​கான ஆதா​ரங்​களு​டன் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பி​யுள்​ளது. 232 பக்​கங்​கள் கொண்ட அந்த கடிதத்​தில் லஞ்சம் பெறப்​பட்​டதற்​கான குற்​றச்​சாட்​டுக்கு போதிய ஆதா​ரங்​கள், முகாந்​திரங்​கள் உள்​ளன.

இது​போன்ற ஊழல் வழக்​கு​களை அமலாக்​கத் ​துறை நேரடி​யாக வழக்குப் பதிவு செய்து விசா​ரிக்க முடி​யாது என்​ப​தால் தாங்​கள் திரட்​டிய ஆதா​ரங்​களை டிஜிபிக்கு அனுப்பி வைத்​துள்​ளனர்.

தமிழக அரசின் வெளிப்​படைத்​தன்​மையை நிரூபிக்​கும் வகை​யில் நகராட்சி நிர்​வாகத்​துறை​யில் நடை​பெற்​றுள்ள ஊழல் குற்​றச்​சாட்டு தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க வேண்​டுமென டிஜிபிக்கு மனு அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, இது தொடர்​பாக தலை​மைச் செயலரின் அனு​ம​தி​யுடன் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க டிஜிபிக்கு உத்​தர​விட வேண்​டும்'' என கோரி​யிருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது.

அதையடுத்து நீதிப​தி​கள், வழக்கு தொடர்​பாக தமிழக உள்​துறைச் செய​லா​ளர், அமலாக்​கத்​துறை இயக்​குநர், டிஜிபி உள்​ளிட்​டோர் பதில்​மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு விசா​ரணையை ஜன.23-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர்.

இதே​போல, தமிழகத்​தில் மணல் குவாரி​களில் நடை​பெற்ற முறை​கேடு தொடர்​பாக டிஜிபிக்கு அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க டிஜிபிக்கு உத்​தர​விடக் ​கோரி அமலாக்​கத் ​துறை சார்​பிலும் தனி​யாக வழக்கு தொடரப்​பட்​டிருந்​தது. அந்த வழக்கு வி​சா​ரணை​யை​யும் நீதிப​தி​கள்​ ஜன.23-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம்: அமலாக்கத் துறை கடிதம் அடிப்படையில் வழக்கு பதிய கோரி மனு
நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in