

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டித்தும், ஒட்டுமொத்த நீதித் துறையின் செயல்பாடுகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆவிட் நுழைவாயில் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக வழக்கறிஞரணி மாநிலத் தலைவர் ஏ.குமரகுரு தலைமை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞரணி தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சு.சீனிவாசன், ஆர்எஸ்எஸ் அகில பாரத நிர்வாகி ரபுமனோகர், மயிலாடுதுறை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.