விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் உடல்​களைக் கொண்​டு​சென்ற வாக​னங்​கள்.

பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் உடல்​களைக் கொண்​டு​சென்ற வாக​னங்​கள்.

Updated on
2 min read

விருதுநகர்: ​விருதுநகர் அருகே பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்த 25 பேரின் உடல்​களும் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப் பட்​டன. விருதுநகர் அருகே கட்​ட​னார்​பட்​டி​யில் பட்​டாசு ஆலை​யில் ஏற்​பட்ட வெடி விபத்​தில் 25 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர்.

அவர்​களது உடல்​கள் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்​டிருந்​தன. உயி​ரிழந்தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.20 லட்​சம் வழங்​கக் கோரி நேற்று முன்​தினம் உடல்​களை வாங்க மறுத்து உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்​து, மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா தலை​மை​யில் பேச்​சு​வார்த்தை நடந்​தது. பின்​னர் உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு அரசு நிவாரணத் தொகை தலா ரூ.5.50 லட்​சத்தை மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா நேற்று முன்​தினம் இரவே வழங்​கி​னார்.

அதைத் தொடர்ந்து 10 பேரின் உடல்​களை உறவினர்​கள் பெற்​றுச்​சென்​றனர். மேலும், அடை​யாளம் காணப்​ப​டாமலிருந்த ஓர் உடல் நேற்று அடை​யாளம் காணப்​பட்​டது. அதன்​படி உயி​ரிழந்​தவர் சேர்​வைக்​காரன்​பட்​டியைச் சேர்ந்த முத்து (50) என்​பது தெரிய​வந்​தது.

நேற்று மீத​முள்ள 15 பேரின் குடும்​பத்​தினருக்​கும் மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா நிவாரணத் தொகையை வழங்​கி​னார். எஞ்​சிய 15 பேரின் உடல்​களும் உறவினர்​களிடம் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டன.

அதோடு இலவச அமரர் ஊர்தி மூலம் அனைத்து உடல்​களும் அவர்​களது சொந்த ஊர்​களுக்கு போலீஸ் பாது​காப்​புடன் அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

ஆலை உரிமையாளர் சரண்

இதனிடையே 25 பேர் உயி​ரிழப்​புக்​குக் காரண​மான பட்​டாசு ஆலை​யின் உரிமை​யாளர் நீதி​மன்​றத்​தில் நேற்று சரணடைந்​தார்.

இந்த வழக்​கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்​யப்​பட்​டனர். வெடி விபத்​தில் 25 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த நிலையில், ஆலை உரிமையாளர் கோவிந்​த நல்​லூரைச் சேர்ந்த ஈஸ்​வரி, அவரது கணவர் முத்​து​மாணிக்கம் ஆகியோர் தலை மறை​வாகினர்.

<div class="paragraphs"><p>முத்துமாணிக்கம்</p></div>

முத்துமாணிக்கம்

அவர்​களை வச்சக்​காரப்​பட்டி போலீ​ஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்​நிலை​யில், முத்​து​மாணிக்​கம் விருதுநகரில் உள்ள முதலா​வது நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் நேற்று காலை சரணடைந்​தார். அவரை மே 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதித்​துறை நடு​வர் நிஷாந்​தினி உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, நீதி​மன்​றக் காவலில் அவர் அடைக்​கப்​பட்​டார். மேலும், இந்த வழக்​கில் முத்​து​மாணிக்​கம் தலைமறை​வாக இருக்க உதவிய அவரது உறவினர்​கள் முத்​து​ராஜ், வைர​முத்​து, வெற்​றிவேல்​முரு​கன் ஆகியோரை வச்​சக்​காரப்​பட்டி போலீ​ஸார் கைது செய்​தனர்.

<div class="paragraphs"><p>பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் உடல்​களைக் கொண்​டு​சென்ற வாக​னங்​கள். </p></div>
குன்னம் தொகுதியில் திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in