நாட்டுப் படகு
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் சூறாவளி காற்றால் நாட்டுப் படகு மூழ்கி சேதம் அடைந்தது.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விக்லின் என்பவர் தனது நாட்டுப் படகை, பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தார். நேற்று இரவு சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டதில் விக்லினின் நாட்டுப் படகு கடலில் மூழ்கியது.
இன்று காலை முழ்கிய படகை மீட்க முயன்றனர். ஆனால் படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் மற்றொரு படகு மூலம் மூழ்கிய படகை கரைக்கு இழுத்து வந்தனர்.
கடலில் நிறுத்தி இருந்த படகுக்குள் கடல் நீர் புகுந்ததால் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக உரிமையாளர் விக்லின் தெரிவித்தார்.