

சென்னை: பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் ஆகியோர் தலைமையில் தமிழக பாஜக மையக்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலையின் வெளியேற்றத்தால் தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் கட்சிக்கு புதிய தலைமையை நியமிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை வந்தார். தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளுடன் அவர் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது, பிரதமரின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைப்பு பயிற்சிகளை கட்சி நிர்வாகிகளுக்கு பி.எல்.சந்தோஷ் வழங்க உள்ளார்.
மேலும், புதிய மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் முக்கியத்தலைவர்களையும் பி.எல்.சந்தோஷ் சந்திக்க உள்ளார்.