அருள் விக்னேஷை கைது செய்யாத தவெக அரசை கண்டித்து பாஜக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்

நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யாத தவெக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக மகளிரணி சார்பில் நாளை (நவ.27) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்யாமல், பாதுகாப்பு கொடுத்து வரும் தவெக அரசை கண்டித்து, 27.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும், கட்சியின் மகளிரணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மகளிரணியின் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை, அமைப்பு மாவட்ட தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பாக ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்</p></div>
தவெக எம்எல்ஏ விவகாரம்: கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவரிடம் ஆட்சியர் ரகசிய வாக்குமூலம்

X