திரைப்பட பாணி அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

பாஜக பேச்சாளர்கள் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். | படம்: எம்.முத்துகணேஷ் |

பாஜக பேச்சாளர்கள் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். | படம்: எம்.முத்துகணேஷ் |

Updated on
1 min read

பல்லாவரம்: திரைப்பட பாணி அரசி​யலை விட்​டு​விட்டு ஆக்​கப்​பூர்​வ​மான களப்​பணி​யில்​ தமிழக அரசு கவனம்​ செலுத்​த வேண்​டும்​ என்று பாஜக தேசிய பொதுச்​செய​லா​ளர் தருண் சுக் தெரிவித்துள்ளார்.

பல்​லா​வரத்​தில் பாஜக சார்​பில் பேச்​சாளர்​களுக்​கான பயிற்சி பட்​டறை நேற்று காலை நடை​பெற்​றது. இதில் பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், தேசிய பொதுச்​செய​லா​ளர் தருண் சுக், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர்.

நிகழ்ச்​சிக்கு பின் பாஜக மூத்த தலை​வர் தமிழிசை, தேசிய பொதுச்​செய​லா​ளர் தருண் சுக் ஆகியோர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர்.

அப்​போது தமிழிசை கூறிய​தாவது: கர்​நாடக எல்​லை​யில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்டது மனிதநேயமற்ற செயல். காவிரி நீரை வழங்​கு​வ​தி​லும், எல்​லைப் பகு​தி​யில் தமிழர்​களின் பாது​காப்​பிலும் கர்​நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

ஊழலற்ற வெளிப்​படை​யான நிர்​வாகத்தை வழங்​கு​வ​தாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், முதல்வரின் முகாம் அலு​வல​கப் பணி​களுக்​கான டெண்​டரில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளது. இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றார்.

பாஜக தேசிய பொதுச்​செய​லா​ளர் தருண் சுக் கூறும்​போது, ``பாஜக தனி​நபர்​களை மைய​மாகக் கொண்ட கட்சி அல்ல, கொள்கை மற்​றும் வலு​வான அமைப்பை அடிப்​படை​யாகக் கொண்டு 365 நாட்​களும் செயல்​படும் கட்சியாகும். கட்சி​யின் கொள்​கை, வரலாறு மற்​றும் மக்​கள் பணி​களை தொண்​டர்​ களிடம் கொண்டு சேர்க்​கும் வகை​யில் தமிழகம் முழு​வதும் மாவட்ட அளவில் பயிற்சி வகுப்​பு​ நடை​பெற்று வரு​கிறது.

வரும் தேர்​தல்​களில் தமிழக அரசி​யலில் பாஜகவலு​வான மாற்று சக்​தி​யாக உரு​வெடுக்​கும். தமிழக அரசு கொள்கை மற்​றும் உறு​தி​யான நோக்​கமின்றி செயல்​படு​கிறது. திரைப்பட வசனங்​களைப் போன்று அரசாங்​கத்தை நடத்த முடி​யாது. திரைப்பட பாணி அரசி​யலை விட்​டு​விட்டு ஆக்​கப்​பூர்​வ​மான களப்​பணி​யில்​ அரசு கவனம்​ செலுத்​த வேண்​டும்​'' என்​றார்​.

<div class="paragraphs"><p>பாஜக பேச்சாளர்கள் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். | படம்: எம்.முத்துகணேஷ் |</p></div>
70 ஆண்டுகளாக நிறைவேறாத நந்தன் கால்வாய் திட்டம்: பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in