சத்துணவு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

சத்துணவு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்​கங்​களின் போராட்​டத்​தின் போது, தமிழக அரசு அறி​வித்த புதிய அறி​விப்​பு​களில் சத்துணவு ஊழியர்​களின் கோரிக்​கைகள் முற்​றி​லு​மாகப் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன.

அரசுடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்​த​தால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தம் மற்​றும் மறியல் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர்.

2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, சத்துணவு ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம், பணிக்​கொடைத் தொகை ரூ.5 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். குடும்ப ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.6,750 வழங்​கப்​படும் என்ற முதல்​வர் ஸ்டா​லினின் வாக்​குறு​தி​கள் 5 ஆண்​டு​கள் ஆகி​யும் நிறைவேற்​றப்​பட​வில்லை.

தேர்​தல் நேரத்​தில் அளித்த வாக்​குறு​தி​களை முதல்​வர் உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும். இந்த வேலைநிறுத்​தப் போராட்​டத்​தால் பள்ளி மாணவர்​கள் மதிய உணவு கிடைக்​காமல் பெரிதும் பாதிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ள​தால், தமிழக அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்​டும்.

சத்துணவு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்
ஸ்ரீராமச்சந்திராவில் காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in