ஏப்3-ம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை: பாஜக மாநிலத் தலைவர் தகவல்

புதுச்சேரியில் பாஜக ஊடக மையத்தை மத்திய அமைச்சர்மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். உடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரியில் பாஜக ஊடக மையத்தை மத்திய அமைச்சர்

மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். உடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம்.

Updated on
1 min read

புதுச்​சேரி: புதுச்சேரியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்.3-ம் தேதி வருகை தருகிறார். புதுச்சேரி பாஜக சார்​பில் தேர்​தல் ஊடக மையம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் மத்​திய அமைச்​சரும் பாஜக தேர்தல் பொறுப்​பாள​ரு​மான மன்​சுக் மாண்​ட​வியா ஊடக மையத்தை திறந்து வைத்​தார். கட்​சி​யின் மாநிலத் தலை​வர் வி.பி.​ராமலிங்​கம், ​பேரவைத் தலை​வர் செல்வம், அமைச்​சர் நமச்​சி​வா​யம் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

பின்​னர் வி.பி.ராமலிங்​கம் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சிறப்​பான கூட்​ட​ணியை ஏற்​படுத்தி எந்​த​வித இடையூறும் இன்றி தேர்​தலில் களம் காண தயா​ராகி விட்​டோம்.

எதிரணி​யில் உள்ள காங்​கிரஸ் - திமுக ஒரு​வொருக்​கொரு​வர் நம்​பிக்​கையற்​று, இப்​போதே யார் முதல்​வர், அமைச்​சர் என பேசி வருகின்​றனர்.

புதுச்​சேரி நலன் ஒன்றை மட்​டும் கருதி பாஜக தொடர்ந்து என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யுடன் கூட்​டணி அமைத்​து, என்டிஏ அரசை மீண்​டும் கொண்டு வந்து மக்​களுக்கு நலத்​திட்​டங்​களை கொடுப்​பது தான் கடமை என்று பணி​யாற்றி வரு​கிறது.

வரும் 27 முதல் 29 வரை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், முன்​னாள் தேசிய தலைவர் நட்டா உள்​ளிட்​டோர் பிரச்​சா​ரத்​துக்​கு வருகின்றனர்.

அதே​போல் ஏப். 3-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி இங்கு நடை​பெறும் ‘ரோடு ஷோ’-​வில் பங்​கேற்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​கள் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் பாஜக ஊடக மையத்தை மத்திய அமைச்சர்</p><p>மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். உடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம்.</p></div>
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19-ம் தேதி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in