காஸ் தட்டுப்பாடு பிரச்சினையை மறைக்க தொகுதி வரையறையை கையிலெடுத்த பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

காஸ் தட்டுப்பாடு பிரச்சினையை மறைக்க தொகுதி வரையறையை கையிலெடுத்த பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: காஸ் தட்டுப்பாட்டை மறைக்க தொகுதி மறுவரையறையை பாஜக கையில் எடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே காஸ் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய மத்திய பாஜக அரசு, இதில் இருந்து செய்திகளைத் திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை ‘ஸ்கிரிப்ட்’டை தற்போது கையில் எடுத்துள்ளது.

பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் என தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, ‘மாநில அரசு என்ன செய்கிறது?’ எனக் கேட்கிறது. சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது.

மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளை யும் மேற்கொண்டுள்ளது. ‘இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பாஜக அரசு என்ன செய்கிறது?’ என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

திருநர் உரிமைகள் சட்டம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருநர் சட்ட திருத்தம் குறித்து முதல்வர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘யாருடைய உரிமைகளை, வாழ்வை பாதிக்கிறதோ, அவர்களது கருத்துகளையே கேட்காமல் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களைத் திணிக்கக் கூடாது. இந்த சட்டத்தைத் திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனைத் திணிக்கக் கூடாது. மத்திய பாஜக அரசு இம்முயற்சியை நிறுத்தி, திருநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் திருநர்களின் உண்மையான இசைவைப் பெற முயல வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பழ.நெடுமாறனுக்கு நன்றி: மற்றொரு பதிவில், ‘‘மண், மொழி, மானம் காத்திட, திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பழ.நெடுமாறனுக்கு நன்றி’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஸ் தட்டுப்பாடு பிரச்சினையை மறைக்க தொகுதி வரையறையை கையிலெடுத்த பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in