

சென்னை: எஸ்ஐஆர்-ஐ வைத்து காங் கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் மா.வெங்கடேசன் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது: எஸ்ஐஆர் மூலம் நடை பெற்ற தேர்தல்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்நோக்கத்துடன் போராட்டங் களை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, சிஜேபி என்ற அமைப்பைத் தூண்டிவிட்டு கல வரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து 6 கோடி இஸ்லாமியர் கள் நீக்கப்பட்டு விட்டதாக பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இந்தத் தரவுகளை அவர் எங்கிருந்து பெற்றார்? அவரிடம் உண்மையிலேயே இதற்கான தரவுகள் இருந்தால் அவற்றை வெளியிட வேண்டும். அதே போல், எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்ச மாக 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளதாக திருமா வளவன் கூறுகிறார்.
ஆனால், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 2.80 கோடி வாக்காளர்கள் நீக்கப் பட்டுள் ளனர். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட, எஸ்ஐஆர் நடவடிக்கையில் தேவையின்றி யாரும் நீக்கப்படவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எனவே, தமிழகத்தில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த காங் கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.