

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின். | படம்: நா.தங்கரத்தினம் |
மதுரை: தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீனாட்சியம்மனையும், சிவபெருமானையும் வழிபட்டு வந்துள்ளேன்.
இந்த தரிசனம் வலிமையையும், ஆற்றலையும் தருகிறது. நாட்டில் அனைத்து மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டிக் கொண்டேன்.
சனாதனிகளுக்கு சக்தி கிடைக்கட்டும். மீனாட்சியம்மன் கோயிலின் வரலாறும் எவ்வளவு பழமையானதோ, அதேபோல, ஆன்மிகத்தை முன்னெடுத்துச் செல்லத் தூண்டும் பல விஷயங்கள் நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றிருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
கோயில்கள் விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் அரசியலுக்காக அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
இந்தியப் பண்பாட்டை அவமதித்தும், அதற்கு கீழ்ப்படியாமலும் இருக்கிறார்கள். இவ்வாறுஅவர் கூறினார். பாஜக மேலிடப்பொறுப்பாளர் அரவிந்த்மேனன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.