நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ

நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ
Updated on
1 min read

சாத்தூர்: சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் பங்கேற்ற ரோடு ஷோ இன்று நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நைனார் நாகேந்திரனுக்கு ஆதரவாக கட்சியின் மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் பலர் சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் செய்தார். அவரைத் தொடர்ந்து சாத்தூரில் இன்று, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடைபெற்றது.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்த நிதின் நபின், ஹெலிகாப்டர் மூலம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வந்து இறங்கினார். பின்னர் காரில், மதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோவில் பங்கேற்றார். அவருடன் நடிகர் சரத்குமார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜகவினர் கொடிகளை அசைத்தும், மலர்களை தூவியும், மாலை அணிவித்தும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் வழியில் குழந்தைகளை தூக்கி கொஞ்சியும், தனக்கு அணிவிக்கப்பட்ட மாலை மற்றும் துண்டுகளை கட்சியினருக்கு வழங்கியும் நிதின் நபின் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மதுரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை சாலை வழியாக முக்குராந்தல் பகுதியில் ரோடு ஷோ நிறைவடைந்தது. இதில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ
“தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும்” - கன்னியாகுமரியில் விஜய் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in