எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் தருவது? - தமிழிசை கருத்து

எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் தருவது? - தமிழிசை கருத்து
Updated on: 
1 min read

திருச்சி: எது​வுமே எழுதாத விடைத்​தாளுக்கு எப்​படி மதிப்​பெண் கொடுக்க முடியும் என தவெக​வின் 6 மாத ஆட்சி குறித்து தமிழக பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சவுந்​தர்​ராஜன் கருத்து தெரி​வித்​துள்​ளார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:

மாநில நலனுக்​காக மத்​திய அரசுடன் இணைந்து செயல்​படுவோம் என முதல்​வர் விஜய் கூறியதை வரவேற்​கிறேன். ஆனால், காங்​கிரஸ் கட்​சி​யுடன் கூட்​டணி வைத்​திருப்​பதை அவர் மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். நிச்​சய​மாக காங்​கிரஸ் முதுகில் குத்​தும்.

நாங்​கள் எந்​தக் கட்​சி​யுடனும் மறைமுகக் கூட்​ட​ணி​யில் இல்லை. தவெகவை எதிர்ப்​பது போலவே திமுகவையும் எதிர்க்​கிறோம். திமுக - பாஜக கூட்​டணி நிச்​சய​மாக இல்லை. தமிழகத்​தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ; கைகள் உயர்​கிறதோ இல்லையோ; தாமரை மலர்ந்தே தீரும். இதில் விசில் குறித்து நான் பேச​மாட்​டேன். அவர்கள் எங்​களுக்கு போட்​டியே இல்லை.

தவெக​வின் 6 மாத ஆட்​சி​யில் எது​வும் நடக்​க​வில்லை. எது​வுமே எழுதாத விடைத்​தாளுக்கு எப்​படி மதிப்​பெண் கொடுக்க முடியும்? மக்​கள் மனம் குளிரும்​படி ஆட்சி செய்ய வேண்​டுமே தவிர, டாஸ்​மாக் குளிரும்​படி ஆட்சி செய்​யக் கூடாது.

திருச்​செந்​தூர் சூரசம்​ஹார விழா​வில் முருக​னுக்கு இணை​யாக முதல்​வர் விஜய்க்கு அரோகரா கோஷம் எழுப்​பியதை முருக பக்​தர்​கள் ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள். இவ்​வாறு அவர் கூறினார்.

எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் தருவது? - தமிழிசை கருத்து
எனக்கு சொந்தமாக கார் எதுவுமில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. விளக்கம்

X