பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி
Updated on
1 min read

“தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​கள் நடக்​கும் போது கனி​மொழி மவுனம் காப்​பது ஏன்​... தனது அண்​ணனை பார்த்து பயமா?” என பாஜக மாநில துணை தலை​வர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்​ளார்.

இது தொடர்​பாக சென்னை கமலால​யத்​தில் குஷ்பு செய்​தி​யாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழக முதல்​வர் தன்னை இந்த மாநிலத்​தின் ‘தந்​தை’ என்று அழைத்​துக்​கொள்ள ஆசைப்​படு​கி​றார். ஆனால், ஒரு தந்​தை​யின் முதல் கடமை தன் பிள்​ளை​களுக்​குப் பாது​காப்பு அளிப்​ப​தே. இரண்​டரை வயதுக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் அன்​றாடம் அரங்​கேறிக் கொண்​டிருக்​கும் போது, எந்​தத் தந்தை மவுன​மாக இருப்​பார்? தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடக்​கும்​போது முதல்​வர் காட்​டும் மவுனம், அவர் தன்னை ‘தந்​தை’ என்று அழைத்​துக்​கொள்​வதற்கே முரணாக இருக்​கிறது.

தமி​ழ​கத்​தில் சட்​டம் - ஒழுங்கு முற்​றி​லும் சீர்​குலைந்​துள்​ளது. விழுப்​புரம் மற்​றும் தூத்​துக்​குடி பகு​தி​களில் பெண்​களுக்கு எதி​ராக நடந்த வன்​முறை​கள் குறித்து கனி​மொழி எம்​.பி ஏன் மவுனம் காக்​கி​றார்​? கேள்வி கேட்​கத் தன் அண்​ணனைப் பார்த்து அவர் பயப்​படு​கி​றா​ரா? இதே நிகழ்​வு​கள் அதி​முக ஆட்​சி​யில் நடந்​திருந்​தால், திமுக-​வினர் வீதி​யில் இறங்​கிப் போராட்​டம் நடத்​தி​யிருப்​பார்​கள். இப்​போது ஏன் இந்த இரட்டை வேடம்? திமுக-​வினர் பெண்​களை வெறும் பாலியல் பொருளாகப் பார்ப்​ப​தால் தான், மாநிலத்​தில் பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் பெருகி வரு​கின்​றன.

பண பலத்​தால் மட்​டும் ஒரு நாடு முன்​னேறி​விட முடி​யாது. மக்​களுக்கு உண்​மை​யான நன்​மை​களைச் செய்​யும் போது​தான் வளர்ச்சி சாத்​தி​யம். ஆனால், திமுக அரசிடம் அத்​தகைய தொலை நோக்​குத் திட்​டங்​கள் எது​வும் இல்​லை. தமி​ழ​கத்​தின் கடன் சுமை ரூ.10 லட்​சம் கோடியைத் தாண்​டி​விட்​டது. ஒரு​புறம் தன்னை ‘அப்​பா’ என்று சொல்​லிக்​கொண்​டே, மறு​புறம் தமி​ழ​கம் முழு​வதும் டாஸ்​மாக் கடைகளைத் திறந்து வைத்து ஒட்​டுமொத்​தக் குடும்​பங்​களை​யும் முதல்​வர் சீரழித்​துக் கொண்​டிருக்​கி​றார்.

மக்​களின் வரிப்​பணத்​தில் பெரும்​பகு​தி​யைச் சுரண்​டி​விட்​டு, மீத​முள்ள சிறு தொகையை மக்​களுக்​குப் பிச்​சை​யாகப் போடும் நிலையே இங்கு நில​வு​கிறது. பெண்​களுக்கு மாதம் ரூ.1,000 அல்​லது 2 ஆயிரம் ரூபாய் கொடுப்​பது மட்​டும் முன்​னேற்​ற​மாகி​வி​டாது. பெண்​கள் சொந்​தக் காலில் நிற்​பதே உண்​மை​யான வளர்ச்​சி. ஆட்​சிக்கு வந்து பணம் சம்​பா​திப்​பது மட்​டுமே உங்​கள் லட்​சி​யம் என்​றால், மக்​களின் பாது​காப்​புக்கு யார் பொறுப்​பு? பதில் சொல்​லுங்​கள் முதல்​வரே. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி
தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in