

சென்னை: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது சோனியா காந்தி அந்தப் பாடலுக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமரியாதை செய்ததாகப் பெரும் சர்ச்சை எழுந்தது. இதற்கு பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தமிழக மாநில பாஜக இளைஞரணி சார்பில் சென்னை அண்ணா சாலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், சோனியா காந்தியின் செயலைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.