மக்கள் வரிப்பணத்தில் இலவச ரோடு ஷோ நடத்தித் தந்த அரசு: கைது நடவடிக்கை குறித்து உதயநிதி விமர்சனம்

மக்கள் வரிப்பணத்தில் இலவச ரோடு ஷோ நடத்தித் தந்த அரசு: கைது நடவடிக்கை குறித்து உதயநிதி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: “மக்​கள் வரிப்​பணத்​தில் எந்​த​விதச் செல​வும் இல்​லாமல் ‘ரோடு ஷோ’ நடத்​தித் தந்​ததற்​காக இந்த அரசுக்​குத் நன்​றி” என தன்னை காவல்​துறை​யினர் விசா​ரணைக்​காக தஞ்​சாவூர் அழைத்​துச் சென்​றது குறித்து எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் விமர்​சித்​துள்​ளார்.

சென்​னை, அண்ணா அறி​வால​யத்​தில் திமுக சட்​டத்​துறை ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், உதயநிதி ஸ்டா​லின், ஆர்​.எஸ் பார​தி, என்​. ஆர். இளங்கோ உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​தில், “மேகே​தாட்டு விவ​காரம், தஞ்​சாவூர் ஆர்ப்​பாட்​டத்​தில் பேசி​யதற்கு உதயநிதி கைது செய்​யப்​பட்​டது, மு.க.ஸ்​டா​லின் குறித்து விமர்​சிப்​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காததது உள்​ளிட்ட விஷ​யங்​களில் தமிழக அரசுக்கு கண்​டனம் தெரி​வித்து தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இதையடுத்து உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: திமுக​வில் 25 அணி​கள் இருந்​தா​லும், சட்​டத்​துறை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது. நாம் மட்​டுமல்ல, தமிழ்​நாடே எதிர்​பா​ராத, ஆட்​சி​யில் அமர்ந்​திருக்​கக்​கூடிய அந்த ‘சர்க்​கஸ்’ கூட்​டமே எதிர்​பா​ராத ஒரு தேர்​தல் முடிவு இது.

நின்​றால் கைது, நடந்​தால் கைது, பேசி​னால் கைது, சமூக வலை​தளத்​தில் ஒரு பதிவு போட்​டால் கைது என்​று, ஒரு மோச​மானபாசிச அரசாக இந்த அரசாங்​கம் செயல்​பட்டு வரு​கிறது.

தூங்கி எழுந்​தால் யாரைக் கைது செய்​ய​லாம் என்று திட்​டம் போட்டு இந்த அரசு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இரண்டு வாரத்​துக்கு முன்பு என்​னை​யும் கைது செய்ய முயற்சி செய்​தது.

‘மி​சா’, ‘எமர்​ஜென்​சி’ இதையெல்​லாம் பார்த்த திமுக​வினர் இதற்​கெல்​லாம் நாம் பயப்பட மாட்​டோம். எந்​தச் செல​வுமே இல்​லாமல் மக்​கள் வரிப்​பணத்​தில் இப்​படி ஒரு ரோடு ஷோ நடத்​து​வதற்​கு, இந்த அரசு நமக்கு உதவி இருக்​கிறது.

அதற்கு நாம் நன்​றியைச் சொல்ல வேண்​டும். தட்​டுத் தடு​மாறி அதி​காரத்​துக்கு வந்​திருக்​கக்​கூடிய இந்த புதிய கோஷ்டி​யில், எல்​லாமே ஜோக்​கர்​தான். யார் அமைச்​சர், யார் எம்​எல்ஏ என யாருக்​குமே தெரிய​வில்​லை.

அவர்​கள் எல்​லாம் அடைமொழி வைத்​துப் பேசி​னால்​தான் மக்​களுக்​குப் புரி​கிறது. மாற்​றம், தூய்மை என்று சொல்லி வந்​தார்​கள். ஆனால், கல்லா கட்ட ஆரம்​பித்​து​விட்​டார்​கள். ஜென் ஸீ இளைஞர்​கள் இன்​றைக்கு கொள்கை பேச ஆரம்​பித்​திருக்​கின்​றார்​கள்.

அது​தான் இந்த ஆட்​சி​யாளர்​களைப் பயமுறுத்​திக் கொண்​டிருக்​கின்​றது. அவர்​கள் வயதில் சிறிய​வர்​கள். அவர்​களைக் கைது செய்​தால், அவர்​களும், அவர்​கள் குடும்​ப​மும் பயந்​து​விடு​வார்​கள் என்று இந்த ஆட்​சி​யாளர்​கள் கருதுகிறார்​கள்.

எனவே அவர்​களுக்கு நாம் உறு​துணை​யாக இருக்க வேண்​டும். இந்த அரசை வீட்​டிற்கு அனுப்​பும் வரை, மீண்​டும் ஸ்டா​லின் முதல்​வர் நாற்​காலி​யில் உட்​காரும் வரை, அத்​தனை அணி​களும் களத்​தில்​ இறங்​கிச்​ செயல்​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

மக்கள் வரிப்பணத்தில் இலவச ரோடு ஷோ நடத்தித் தந்த அரசு: கைது நடவடிக்கை குறித்து உதயநிதி விமர்சனம்
விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in