பழநி தொகுதியை ஒதுக்காததை கண்டித்து மத்திய இணை அமைச்சரிடம் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்.

பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்.

Updated on
1 min read

பழநி: பழநி தொகு​தியை பாஜக​வுக்கு ஒதுக்​காததை கண்​டித்து பழநி வந்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கனை முற்​றுகை​யிட்டு நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் நேற்று வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பழநி தொகுதி அதி​முக​வுக்கு ஒதுக்​கப்​பட்​டது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக தொண்​டர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, இளைஞரணி நிர்​வாகி சதீஷ் கட்சி அலு​வலக மாடி​யில் ஏறி தற்​கொலை மிரட்​டல் விடுத்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் பழநி வந்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், பழநி அடி​வாரத்​தில் உள்ள புலிப்​பாணி ஆசிரமத்​தில் சிறப்பு யாகம் நடத்​தி​விட்​டு, மலைக்​கோ​யிலுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்​து​விட்டு மீண்​டும் நேற்று ஆசிரமம் திரும்​பி​னார்.

அப்​போது அவரை, பாஜக மகளிரணி​யினர் முற்​றுகை​யிட்டு பழநி தொகு​தியை பாஜக​வுக்கு ஒதுக்க கோரி வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். பழநியை பாஜக​வுக்கு ஒதுக்க வேண்​டும். எங்​களுக்கு முடிவு தெரி​யாமல் உங்​களை இங்​கிருந்து அனுப்ப முடி​யாது என்று நிர்​வாகி​கள் கூறினர்.

அதற்கு எல்​.​முரு​கன், ‘பழநியை ஒதுக்​காதது குறித்து உங்​களின் ஆதங்​கத்​தை​யும், கோரிக்​கை​யை​யும் மேலிடத்​தில் கூறி, பழநியை பாஜக​வுக்கு ஒதுக்க ஏற்​பாடு செய்கிறேன்’ என்று கூறி​விட்டு காரில் ஏற முயன்​றார். ஆனால் அவரது காரை மறித்​து, தரை​யில் அமர்ந்து தொண்​டர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அவர்​கள், ‘பழநியை ஒதுக்​க​வில்​லை​யெனில் எங்​களுக்கு கட்​சி​யும் வேண்​டாம், பதவி​யும் வேண்​டாம்’ என்று முழக்​கம் எழுப்​பினர். இந்த போராட்​டத்​துக்கு நடுவே கோப​மாக காரில் காத்​திருந்த எல்​.​முரு​கன், நிர்​வாகி​கள் சிலரை அழைத்து தொகுதி ஒதுக்​கு​வது தொடர்​பாக பேசலாம் என்று கூறி​யும் கோயில் என்​றும் பார்க்​காமல் போராட்​டத்​தில் ஈடு​படு​வது நல்​லதல்ல.

இப்​படி நடந்து கொள்​வது சரியா என்று கண்​டித்​தார். பின்​னர், போராட்​டத்​தில் ஈடு​பட்ட தொண்​டர்​களை திண்​டுக்​கல் மேற்கு மாவட்​டத் தலை​வர் ஜெய​ராமன் சமா​தானப்​படுத்​தி, மத்​திய அமைச்​சர் பழநியை பாஜக​வுக்கு பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி​யுள்​ளார். நல்ல பதில் கிடைக்​கும்.

போராட்​டத்​தைக் கைவிட்​டு, அவர் செல்ல வழி​விடுங்​கள், என்று கேட்​டுக்​கொண்​டார். இதையடுத்​து, அனை​வரும் கலைந்து சென்​றனர். அதன் பின்​னர், எல்​.​முரு​கன் சென்​றார்.

இதனிடையே, இந்த போராட்​டத்​தால் அதி​முக​வுக்கு ஒதுக்​கப்​பட்ட பழநி தொகுதி பாஜக​வுக்கு கை மாறி​விடுமோ என்ற ஒரு​வித அச்​சத்​தில் பழநி பேரவைத் தொகுதி அதி​முக​வினர் உள்​ளதாக தெரிகிறது.

<div class="paragraphs"><p>பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள். </p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in