மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 மார்ச் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 மார்ச் 2026
Updated on
1 min read

மேஷம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். பணம், நகைகள், முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் உண்டாகும்.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டைப் புகைச்சல், வயிற்று வலி குணமாகும். பல வகையிலும் பண வரவு உண்டு.

மிதுனம்: புதிய நபர்கள், வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையற்ற குழப்பங்கள் விலகும். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்: எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் நம்பிக்கை, துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கன்னி: எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நம்பிக்கை, உற்சாகம் கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களுடன் நட்பு மலரும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.

துலாம்: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றி புரிந்துகொண்டு, விரும்பி வருவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் கையிருப்பு கரையும் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

விருச்சிகம்: தேவையற்ற அச்சம், கவலை, மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு உயரும். அலுவலகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.

தனுசு: தடைகள், இடையூறுகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகன பழுதை சரிசெய்வீர்கள்.

மகரம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளை களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும். வாயுக் கோளாறு, சளி தொந்தரவு வந்து நீங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

கும்பம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு, கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இழுபறியாக இருந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். முக்கிய விஷயத்தில் நன்கு யோசித்து முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ் வீர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 மார்ச் 2026
ஜோதிட நாள்காட்டி 30.03.2026 | பங்குனி 16 - திங்கள்கிழமை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in