அண்ணாமலை இயக்கத்துக்கு செல்வோரை தடுத்து நிறுத்த பாஜக நிர்வாகிகள் அறிவுரை

அண்ணாமலை இயக்கத்துக்கு செல்வோரை தடுத்து நிறுத்த பாஜக நிர்வாகிகள் அறிவுரை
Updated on
1 min read

மதுரை: அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட அளவில் நடைபெற்று வரும் கூட்டங்களில் பாஜகவினருக்கு நிர்வாகிகள் அறிவுரை கூறி வருகின்றனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகிய பிறகு, அவரது ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் நேற்று வரை 18.63 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். குறிப்பாக அண்ணாமலை மாநில தலை வராக இருந்தபோது, அவரால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தவர்கள், இந்த இயக்கத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாஜகவை சேர்ந்த பலர், அக்கட்சியிலிருந்து விலகி அண் ணாமலையின் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதைத் தடுக்க பாஜக மாநில நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கட்சி அமைப்புரீதியான மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

மதுரையில் 3 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங் களில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பேசியவர்கள், ‘யாரும் கட்சியிலிருந்து விலக வேண்டாம்.

பாஜக தேசியக் கட்சி. கொள்கை பிடிப்புள்ள கட்சி. இதற்கு முன்பு தலைவர்கள் பலர் விலகியபோதிலும் கட்சி வலு இழந்தது இல்லை.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட தயாராக வேண்டும். கட்சியை விட்டு விலகியவர்களை மீண் டும் பாஜகவுக்கு அழைத்து வாருங்கள்’ என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், அண்ணாமலையின் இயக் கத்தில், 20 நாட்களாகியும் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்தை தொடவில்லை.

பாஜகவினர் அதிக எண்ணிக் கையில் அவருடன் செல்ல வில்லை. இருப்பினும், அண்ணாமலையுடன் செல்லும் மனநிலையில் இருப்பவர்களை தடுத்து நிறுத்தி, பாஜகவில் தொடரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.

அண்ணாமலை இயக்கத்துக்கு செல்வோரை தடுத்து நிறுத்த பாஜக நிர்வாகிகள் அறிவுரை
“காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் நியாயமற்றது” - சோனியா காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in