பிரதமரின் கன்னியாகுமரி வருகைக்கு பிறகு தடயமே இல்லாமல் திமுக மறைந்து போகும்: பாஜக விமர்சனம்

பிரதமரின் கன்னியாகுமரி வருகைக்கு பிறகு தடயமே இல்லாமல் திமுக மறைந்து போகும்: பாஜக விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: பிரதமர் மோடி​யின் கன்​னி​யாகுமரி வரு​கைக்கு பிறகு, கடலில் கரைத்த பெருங்​கா​யம் போல தடயமே இல்​லாமல் திமுக மறைந்து போகும் என தமிழக பாஜக விமர்​சனம் செய்​துள்​ளது.

இதுகுறித்து, பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​. எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: உலகம் இது​வரை கண்​டி​ராத மக்​கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்​சியை முதல்​வர் ஸ்டா​லின் நடத்தி வரு​கிறார்.

மதுரை, திருச்சி மற்​றும் மது​ராந்​தகம் பொதுக்​கூட்​டங்​களில் பிரதமர் மோடி முன்​வைத்த அடுக்​கடுக்​கான குற்​றச்​சாட்​டு​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் இது​வரை ஏன் மவுனம் சாதிக்​கிறார்? தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு செய்​துள்ள சாதனை​களை பிரதமர் பட்​டியலிட்​டுள்​ளார்.

ஆனால், ‘மத்​திய அரசு தமிழகத்​துக்கு எது​வும் செய்​ய​வில்​லை’ என தின​மும் பொய் மூட்​டைகளை அவிழ்த்து விடும் முதல்​வர் ஸ்டா​லின், பிரதமரின் புள்​ளி​விவரங்​களுக்கு பதில் அளிக்​கத் தயா​ரா?”

பிரதமர் மோடி, 15-ம் தேதி நாகர்​கோ​வில் வருகை தரு​வதற்கு முன்​பாக, அவர் எழுப்​பி​யுள்ள கேள்வி​களுக்கு முதல்​வர் நேரடி​யாக பதில் அளிக்க வேண்​டும். திமுக​வுக்கு வாக்​களிக்​கப் போவ​தில்லை என பெண்​கள் இறைவனின் சாட்​சி​யாக சபதமேற்​றுள்​ளனர்.

பிரதமர் மோடி​யின் கன்​னி​யாகுமரி வரு​கைக்​குப் பிறகு, திமுக எனும் தீய சக்தி அந்​தக் கடலில் கரைத்த பெருங்​கா​யம் போலத் தடயமே இல்​லாமல் மறைந்து போகும்.

பிரதமரின் கன்னியாகுமரி வருகைக்கு பிறகு தடயமே இல்லாமல் திமுக மறைந்து போகும்: பாஜக விமர்சனம்
மின்வாரிய கேங்மேன்கள், களப்பணி ஊழியர்களுக்கு தபால் வாக்கு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in