25 நாட்கள் சேவைப் பணி இயக்கம்: பாஜக அழைப்பு

25 நாட்கள் சேவைப் பணி இயக்கம்: பாஜக அழைப்பு
Updated on: 
1 min read

சென்னை: பிரதமர் மோடி​யின் நலத்​திட்​டங்​கள் மற்​றும் மக்​கள் நலப் பணிகளை பொது​மக்​களிடம் கொண்டு சேர்க்​கும் வகை​யில், டிச. 1-ம் தேதி முதல் 25 நாட்​கள் சேவைப் பணி இயக்​கத்தை பாஜக நடத்துகிறது.

இது​குறித்து பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: வரும் டிச.1 முதல் 25-ம் தேதி வரை சேவைப் பணி இயக்​கம் நடத்​தப்​பட உள்ளது.

இதில் சேவைத் தூதர்​களாகப் பணி​யாற்ற விருப்​ப முள்​ளவர்​கள் தொகுதிகளில் தங்கி முழு நேரப் பணி​யாளர்களாக சேவையாற்றுவர்.

இதை ஒருங்​கிணைக்க மாநிலச் செய​லா​ளர் கதலி நரசிங்​கப்​பெரு​மாள், பெருங் கோட்ட அமைப்​புச் செய​லா​ளர்​கள் பால​குமார், கிருஷ்ணகுமார், பேட்டை சிவா, ஓபிசி அணி முன்​னாள் மாநிலப் பொதுச்​செய​லர் ராஜ்குமார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

25 நாட்கள் சேவைப் பணி இயக்கம்: பாஜக அழைப்பு
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

X