தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

தேர்தல் ஆணையத்துக்கு பேரவைச் செயலகம் தகவல்
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தவெக எம்​எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்​தூர் தொகுதி காலியானதாக தேர்​தல் ஆணை​யத்​துக்​குச் சட்​டப்பேரவைச் செயல​கம் தகவல் அனுப்​பியுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவைப் பொதுத் தேர்​தலில் திருச்சி கிழக்கு மற்​றும் பெரம்​பூர் தொகுதி​களில் வெற்றி பெற்​றிருந்த முதல்​வர் விஜய், திருச்சிகிழக்கு தொகுதி எம்​எல்ஏ பத​வியை ராஜினாமா செய்​தார்.இத​னால், திருச்சி கிழக்கு தொகுதிகாலியானது.

இதேபோல் அதிமுக சார்​பில் வெற்றி பெற்ற மதுராந்​தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்​தி​யபாமா, பெருந்​துறை ஜெயகுமார், அம்​பாசமுத்​திரம் இசக்கி சுப்​பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்​கர், விராலிமலை சி.விஜயபாஸ்​கர் ஆகியோ​ரும் தங்​கள் எம்​எல்ஏ பத​வியை ராஜினாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.

இத​னால், இந்த 7 தொகுதி​களும் காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறி​ப்பு வெளியிட்​டது. இதனிடையே அண்​மையில் நடந்து முடிந்த மதுராந்​தகம், தாராபுரம் தொகுதி​களுக்​கான இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்ட மரகதம் குமரவேல், சத்​யபாமா ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

மீதமுள்ள 5 தொகுதி​களுக்கு நீதி​மன்ற வழக்கு காரண​மாகத் தேர்​தல் நடத்​தப்​பட​வில்லை. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்​நிலை​யில், உடல்​நலக்​குறைவு காரண​மாக கடந்த 3 மாதங்​களாக சென்னையில் தனியார் மருத்​து​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் தவெக எம்​எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இதைத்தொடர்ந்து, கொளத்​தூர் தொகுதி காலியானதாக தேர்​தல் ஆணை​யத்​துக்கு சட்​டப்​பேரவைச் செயல​கம் தகவல் அனுப்​பியுள்​ளது. இத​னால் காலியாக உள்ள சட்​டப்​பேரவை தொகுதி​களின் எண்​ணிக்கை 6-ஆக உயர்ந்​துள்​ளது.

கடந்த பொதுத்​தேர்​தலில் கொளத்​தூர் தொகுதி​யில் திமுக தலை​வரும் முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் வி.எஸ்.பாபு போட்​டி​யிட்​டார்.

இதில் அவர் 82,997 வாக்​கு​களை​யும், ஸ்டா​லின் 74,202 வாக்​குகளையும் பெற்​றனர். இந்த வெற்றியின் மூலம் வி.எஸ்.பாபு அனைவரின் கவனத்​தையும் ஈர்த்​தார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஜோதிட நாள்காட்டி 23.11.2026 | கார்த்திகை 07 - திங்கள்கிழமை

X