பிரதமர் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு

பிரதமர் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு
Updated on: 
1 min read

சென்னை: பூந்​தமல்லி – வடபழனி இடையே​யான வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி அக்​.11-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளார். அதைத் தொடர்ந்து பூந்​தமல்​லி​யில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயி​லில் பயணம் மேற்​கொள்​கிறார்.

பின்​னர், சென்னை ஐஐடி வளாகத்​துக்கு செல்​லும் பிரதமர், அங்கு நடை​பெறும் அரசு விழா​வில், வேலூர் புதிய விமான நிலை​யம் மற்​றும் பல்​வேறு தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​து, புதிய திட்​டப் பணி​களுக்​கும் அடிக்​கல் நாட்​டு​கிறார்.

ஐஐடி வளாகத்​தில் அமைந்​துள்ள ஜலகண்​டேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார். ஐஐடி நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்​டு, நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையத்​தில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் பிரதமர் பங்​கேற்​கிறார்.

சென்னை வரும் பிரதமருக்கு தமிழக பாஜக சார்​பில் உற்​சாக வரவேற்பு அளிக்க விரி​வான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. போரூரில் இருந்து ஐஐடி வளாகம் வரை பிரதமர் செல்​லும் வழியெங்​கும் கலை நிகழ்ச்​சிகளு​டன் வரவேற்பு அளிக்க பாஜக​வினர் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

பிரதமர் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு
அந்நிய முதலீட்டுக்கு தவெக அரசு உரிமை கோர முடியாது: டிஆர்பி ராஜா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in