பாஜக, காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் மறுப்பு

செல்வப்பெருந்தகை உள்பட 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பாஜக, காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் மறுப்பு
Updated on
3 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் பாஜக​வும் திமுக தலை​மையி​லான கூட்​ட​ண​யில் இடம்​பெற்​றுள்ள காங்​கிரஸ் கட்​சி​யும் வேட்​பாளர் பட்​டியலை நேற்று வெளி​யிட்​டன. பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை மற்​றும் அவரது ஆதர​வாளர்​களுக்கு தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு மறுக்​கப்​பட்​டுள்​ளது. காங்​கிரஸில் அக்​கட்​சி​யின் தமிழகத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்ட 12 எம்​எல்​ஏக்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் வரும் 23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்ள நிலை​யில், மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடக்​கிறது. அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக​வுக்கு ஒதுக்​கப்​பட்ட 27 தொகு​தி​களில் வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​வ​தில் கடும் போட்டி நில​வியது. பல்​வேறு காரணங்​களால் பட்​டியல் வெளி​யா​வ​தில் பெரும் இழுபறி நீடித்​தது.

கடந்த 31-ம் தேதி சென்னை வந்த மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல், பாஜக மையக்​குழு​வுடன் நடத்​திய தீவிர ஆலோ​சனைக்​குப் பிறகு, பட்​டியல் இறுதி செய்​யப்​பட்டு அக்​கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் அருண் சிங் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட்டார். இந்​தப் பட்​டியலில் பல மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கடந்த முறை திருநெல்​வேலி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், இந்த முறை சாத்​தூர் தொகு​திக்​கும் கோவை தெற்கு தொகு​தி​யில் வெற்றி பெற்ற வானதி சீனி​வாசன் கோவை வடக்கு தொகு​திக்​கும் மாற்​றப்​பட்​டுள்​ளனர். மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் அவி​நாசி தொகு​தி​யிலும், முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை மயி​லாப்​பூர் தொகு​தி​யிலும் போட்​டி​யிடு​கின்​றனர். மொடக்​குறிச்​சி​யில் தற்​போதைய எம்​எல்ஏ சரஸ்​வ​திக்கு பதிலாக அவரது மரு​மகள் கிருத்​திகா சிவக்​கு​மார் அதே தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.

நீண்ட எதிர்​பார்ப்​புக்​குப் பிறகு, முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை இந்​தத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. அவருக்​கும் அவரது ஆதர​வாளர்​களுக்​கும் வாய்ப்பு மறுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், தென் இந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சி​யின் தலை​வர் கே.சி.​திரு​மாறனுக்​கு, பாஜக​வில் இருந்​து, ஒரு தொகுதி வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், புதிய நீதி கட்​சிக்கு ஒரு தொகு​தி, பாஜக​ வழங்​கும் என கூறப்​பட்ட நிலை​யில், அந்த கட்​சிக்கு எந்த தொகு​தி​யும் வழங்​கப்​பட​வில்​லை.

இதுகுறித்து அக்கட்சியின் தலை​வர் ஏ.சி.சண்​முகம் கூறும்​போது, ‘கேட்ட தொகு​தியை வழங்​காமல், கடின​மான தொகு​தியை பாஜக எங்​களுக்கு வழங்​கிய​தால், அந்த தொகு​தியை பாஜக​வுக்கு விட்​டுக் கொடுத்​து​விட்​டேன். அந்த தொகு​தி​யில் நல்ல வேட்​பாளரை பாஜக களமிறக்​கி​யுள்​ளது. நிச்​ச​யம் பாஜக வெற்றி பெறும். புதிய நீதி கட்சி ஒரு தொகு​தி​யில் மட்​டும் போட்​டி​யிடும்’ என்​றார்.

பாஜக வேட்​பாளர்​கள் விவரம்: சாத்​தூர் - நயி​னார் நாகேந்​திரன், மயி​லாப்​பூர் - தமிழிசை, கோவை வடக்கு - வானதி சீனி​வாசன், அவி​நாசி - எல்​.​முரு​கன், ஆவடி - எம்​.​ராஜசிம்ம மகேந்​திரா (எ) அஷ்​வின் குமார், தளி - டாக்​டர் நாகேஷ்கு​மார், திரு​வண்​ணா​மலை - சி.ஏழு​மலை, ராசிபுரம் (தனி) - டாக்​டர் எஸ்​.டி.பிரேம்​கு​மார், மொடக்​குறிச்சி - கிருத்​திகா சிவக்​கு​மார், உதகமண்​டலம் - போஜ​ராஜன். திருப்​பூர் (தெற்​கு) - எஸ்​.தங்​க​ராஜ், திரு​வாரூர் - கோவி சந்​துரு, தஞ்​சாவூர் - எம்​.​முரு​கானந்​தம், கந்​தர்​வக்​கோட்டை (தனி) - சி.உதயகு​மார், புதுக்​கோட்டை - என்​.​ராமசந்​திரன், அறந்​தாங்கி - கவிதா ஸ்ரீ​காந்த், திருப்​பத்​தூர் - கே.சி.​திரு​மாறன், மானாமதுரை (தனி) - பொன். வி.​பால​கணப​தி.

மதுரை தெற்கு - ராம சீனி​வாசன், ராம​நாத​புரம்- ஜிபிஎஸ் கே.​நாகேந்​திரன், திருச்​செந்​தூர்- கே.ஆர்​.எம்​.​ரா​தாகிருஷ்ணன், வாசுதேவநல்​லூர் (தனி) - ஆனந்​தன் அய்​யா​சாமி, ராதாபுரம் - எஸ்​.பி.​பால​கிருஷ்ணன், நாகர்​கோ​வில்- எம்​.ஆர்​.​காந்​தி, குளச்​சல்- டி.சிவக்​கு​மார், பத்​ம​நாபுரம்- பி.ரமேஷ், விளவங்​கோடு - எஸ்​. விஜயதரணி.

காங்​கிரஸில் 13 புது​முகங்​கள்: இதே​போல் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்​கிரஸ் கட்சி வேட்​பாளர் பட்​டியலும் நேற்று வெளி​யானது. ஸ்ரீபெரும்​புதூர் தொகு​தி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்ட 12 எம்​எல்​ஏக்​களுக்கு மீண்​டும் வாய்ப்​பளிக்​கப்​பட்​டுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸுக்கு கடந்த தேர்​தலில் 25 தொகு​தி​கள் ஒதுக்​கிய நிலை​யில் 18-ல் வென்​றது. அதனால் இந்த முறை 25 தொகு​தி​களை ஒதுக்க திமுக திட்​ட​மிட்​டிருந்​தது.

நீண்ட போராட்​டத்​துக்கு பிறகு அக்​கட்​சிக்கு 28 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதியே அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், வேட்​பாளர் தேர்வு கடந்த சில நாட்​களாக நடை​பெற்​றது. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காங்​கிரஸ் தலை​வர் ராகுல்​ காந்தி முன்​னிலை​யில் வேட்​பாளர்​ பட்​டியல், நீண்ட இழுபறிக்​குப் பிறகு இறுதி செய்​யப்​பட்டு நேற்று வெளி​யிடப்​பட்​டது. அதி​லும் மதுரை மேலூர் தொகுதி வேட்​பாளர் இன்​னும் அறிவிக்​கப்​பட​வில்​லை. 27 வேட்​பாளர்​கள் மட்​டுமே அறிவிக்​கப்​பட்​டனர்.

வேட்​பாளர் விவரம்: பொன்​னேரி (தனி)- துரை சந்​திரசேகர், வேளச்​சேரி- அசன் மவுலா​னா, ஸ்ரீபெரும்​புதூர் (தனி)- செல்​வப்​பெருந்​தகை, சோளிங்​கர்- ஏ.எம்​.​முனிரத்​தினம், ஊத்​தங்​கரை- ஆர்​.குப்​பு​சாமி, கிருஷ்ணகிரி- ஏ.செல்​லக்​கு​மார், பென்​னாகரம்- ஜிகேஎம்​.தமிழ்​குமரன், ஆத்​தூர்- எஸ்​.கே.அர்த்​த​நாரி, ஈரோடு கிழக்​கு- ஜி.பழனியப்​பன், உதகை- பி.​ராமச்​சந்​திரன், கவுண்​டம்​பாளை​யம்- கே.பி.சூரியபிர​காஷ், சிங்​காநல்​லூர்- வி.ஸ்ரீநிதி நாயுடு, துறையூர்- விச்சு லெனின் பிர​சாத், கடலூர்- ஏ.எஸ்​.சந்​திரசேகரன்.

மயி​லாடு​துறை- ஜமால் யூனுஸ் முகமது, அறந்​தாங்​கி- டி.​ராமச்​சந்​திரன், காரைக்​குடி- எஸ்​.​மாங்​குடி, உசிலம்​பட்​டி- டி.சர​வணக்​கு​மார், சிவ​காசி- ஜி.அசோகன், திரு​வாடனை- ராம கரு​மாணிக்​கம், ஸ்ரீவை​குண்​டம்- எஸ்​.ஊர்​வசி அமிர்​த​ராஜ், சங்​கரன்​கோ​வில்- சங்கை கணேசன், அம்​பாச​முத்​திரம்- வி.பி.துரை, நாங்​குநேரி- ரூபி மனோகரன், குளச்​சல்- தாரகை கத்​பர்ட், விளங்​கோடு- டி.டி.பிர​வீன், கிள்​ளியூர்- செ.​ராஜேஷ்கு​மார்.

இந்த வேட்​பாளர் பட்​டியலில் 12 எம்​எல்​ஏக்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. தென்​காசி பழனி நாடார், குளச்​சல் தொகு​தி​யில் 3 முறை வென்ற ஜே.ஜி.பிரின்​ஸ், உதகை ஆர்​.கணேஷ், விருத்​தாச்​சலம் ராதாகிருஷ்ணன், மயி​லாடு​துறை எஸ்​.​ராஜகு​மாரன் ஆகிய 5 எம்​எல்​ஏக்​களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. 2 மகளிருக்​கும் 13 புது​முகங்​களுக்​கும் வாய்ப்பு தரப்​பட்​டுள்​ளது.

ஆட்​சி​யில், அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என தொடர்ந்து கட்சி தலை​மையை வலி​யுறுத்தி வந்த சட்​டப்​பேரவை காங்​கிரஸ் தலை​வர் ராஜேஷ்கு​மாருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. கட்​சி​யில் சேர்ந்த ஒரே வாரத்​திலேயே, பாமக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் ஜிகேஎம்​.தமிழ்​குமரனுக்​கும் வாய்ப்​பளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனிடையே மேலூர் தொகு​திக்​கான வேட்​பாளர் அறிவிக்​கப்​ப​டா​மல் நிலு​வையில் உள்​ளது. அந்​தத் தொகு​தி​யில் தனது உறவினருக்கு வாய்ப்​பளிக்க மாணிக்​கம் தாகூர் எம்​.பி. முயன்று வரு​வ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தேசி​ய கட்​சிகளான காங்​கிரஸூம்​, பாஜக​வும்​ நேரடி​யாக உதகை, அறந்​தாங்​கி, குளச்​சல்​, விளவங்​கோடு ஆகிய தொகுதிகளில்​ மோதுகின்​றன.

பாஜக, காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் மறுப்பு
“சுந்தர்.சி-யின் வருகை ஒரு ‘படித்த’ அரசியல்வாதியை நடுங்க வைத்துள்ளது” - குஷ்பு விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in