கடலூரில் கோழிகள் இறப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம்: மத்திய அரசு

கடலூரில் கோழிகள் இறப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம்: மத்திய அரசு
Updated on: 
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் (H5N1) தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் ஓரிடத்தில் கோழிகள் உயிரிழப்புக்கு பறவைக்காய்ச்சலே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம் கிராமங்களில் கோழிகள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பேசுகையில், “கடலூரில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத் துறையும் அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை தொடங்கியுள்ளது. கட்டியாங்குப்பம் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு புதைக்கப்படும். மேலும், அங்குள்ள கோழிப் பண்ணைகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாங்கள் கடலூர் மாவட்டத்தில் இருந்து 16 மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அதில் 5 மாதிரிகளில் லேசான காய்ச்சல் உள்ளது. எனவே, அப்பகுதிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். கோழிகள் உயிரிழப்பு தொடர்பாக முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசின் வழிகாட்டுதல்களின்படி பண்ணையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.

கடலூரில் கோழிகள் இறப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம்: மத்திய அரசு
காவல் துறையில் 10,000 புதிய பணியிடங்கள்: 6 மாதங்களில் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு

X