“திமுக - தவெக இடையேதான் போட்டி” - பெங்களூரு புகழேந்தி கருத்து

பெங்களூரு புகழேந்தி | கோப்புப் படம்
பெங்களூரு புகழேந்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

2026 தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்தில் 4 பிரிவாக அதிமுகவினர் மரியாதை செலுத்தியது வேதனை அளிக்கிறது. இயக்கத்தை ஒழிக்கும் எண்ணத்தில் பழனிசாமி செயல்படுகிறார்.

நயினார் நாகேந்திரன் ரத்தத்தில் திராவிடத்தின் கொள்கையும் கோட்பாடும்தான் உள்ளது. தமிழகத்தில் மதகலவரத்தை தூண்ட நயினார் நாகேந்திரன் முயற்சிக்க வேண்டாம். பழனிசாமி ஒத்துழைத்தால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும். தற்போதை கருத்துக் கணிப்பில் அதிமுகவை விட திமுக, தவெக முன்னிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது. வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி.

செங்கோட்டையன் அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டார். அதிமுக முடிந்து விட்டது. இனி அதிமுகவுக்கு எந்த நிலையும் இல்லை. பாஜகவின் பின்னால் யார் சென்றாலும் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ஓபிஎஸ் எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில்தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது. விஜயின் ரோடு ஷோ ஒரு பாடத்தை புகட்டி விட்டது. இனி ரோடு ஷோ வேண்டாம்; பொதுக்கூட்டம் மூலம் மக்களை தலைவர்கள் சந்தித்தால் போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூரு புகழேந்தி | கோப்புப் படம்
ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு: மாற்று இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in